» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

செய்துங்கநல்லூரில் பொங்கல் விளையாட்டு போட்டி

சனி 18, ஜனவரி 2020 5:40:55 PM (IST)செய்துங்கநல்லூரில் பொங்கல் விழாவை முன்னிட்டு நடைபெற்ற மெகா கோலப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. 

தூத்துக்குடி மாவட்டம், செய்துங்கநல்லூரில் பொங்கல் விளையாட்டு போட்டி நடந்தது. இதையொட்டி செய்துங்கநல்லூர் மேலத் தெருவில் இருந்து கீழத்தெரு வரை போடப்பட்டிருந்த பிரமாண்டமான கோல போட்டி பொதுமக்களை கவர்ந்தது. இந்த போட்டிக்கு ஊர் பெரியவர் ராமசாமி தலைமை வகித்தார். ஆறுமுகம், எம்.பி. முத்துசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ராமகிருஷ்ணன் வரவேற்றார்.

சிறப்பு விருந்தினராக எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு கலந்துகொண்டு வெற்றியாளர்களை தேர்வு செய்து பரிசுகளை வழங்கினார். இதில் முதல் பத்து பேருக்கு சிறப்பு பரிசும், போட்டியில் கலந்துகொண்ட அனைவருக்கு ஆறுதல் பரிசும் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் பாண்டியன் கிராம வங்கி நகை மதீப்பீட்டாளர் கணேசன், வீரபுத்திரன் உள்பட பலர் கலந்துகொண்டனர். நிறைவாக சுடலை முத்து நன்றி கூறினார். இதற்கான ஏற்பாடுகளை செய்துங்கநல்லூர் ஆசை வெண்ணிலா இளைஞர் அணியினர் செய்திருந்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

சேகர தலைவரை தாக்கிய முன்னாள் ஊழியர் கைது

புதன் 30, செப்டம்பர் 2020 11:02:19 AM (IST)

Sponsored Ads


Anbu Communications


Black Forest Cakes


Thoothukudi Business Directory