» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

நாலுமாவடியில் கபடி போட்டி: சென்னை, திருப்பூர் அணிகள் வெற்றி - தூத்துக்குடி அணி 2வது இடம்

சனி 18, ஜனவரி 2020 3:20:21 PM (IST)நாலுமாவடியில் நடந்த மாநில அளவிலான மின்னொளி கபடி போட்டியில் வெற்றி பெற்ற சென்னை மற்றும் திருப்பூர் அணிகளுக்கு ரெடீமர்ஸ் கோப்பை வழங்கப்பட்டது.

தூத்துக்குடி மாவட்டம், குரும்பூர் அருகே உள்ள நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் விளையாட்டுத்துறை சார்பில் 6வது ஆண்டு ரெடீமர்ஸ் கோப்பைக்கான மாநில அளவிலான தமிழர் திருநாள் மின்னொளி கபடி போட்டி நாலுமாவடி காமராஜ் மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் 2 நாட்கள் நடந்தது. இதில் நெல்லை, தூத்துக்குடி, குமரி, திருப்பூர், சேலம், சென்னை உள்பட 19 அணிகள் கலந்து கொண்டன. நிறைவு நாளன்று ஆண்கள் பிரிவில் நடந்த முதல் அரை இறுதி போட்டியில் தூத்துக்குடி என்.எப்.சி. அணியும், தென்திருப்பேரை ஜாலி பிரண்ட்ஸ் அணியும் மோதியது. இதில் 29:27 என்ற புள்ளிகணக்கில் தூத்துக்குடி என்.எப்.சி. அணி வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது. 

ஆண்கள் பிரிவில் நடந்த 2வது அரை இறுதி போட்டியில் அலத்தங்கரை ஏடூஇசட் அணியும், சென்னை டி.பி. ஜெயின் அணியும் மோதியது. இதில் 17:39 என்ற புள்ளிக்கணக்கில் சென்னை டி.பி. ஜெயின் அணி வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது. மகளிர் பிரிவில் நடந்த முதல் அரை இறுதி போட்டியில் திருப்பூர் ஜெயசித்ரா அணியும், தூத்துக்குடி விவிடி பள்ளி அணியும் மோதியது. இதில் 43:25 என்ற புள்ளி கணக்கில் திருப்பூர் அணி வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது. மகளிர் பிரிவில் நடந்த 2வது அரை இறுதி போட்டியில் சேலம் ஏ.வி.எஸ். கல்லூரி அணியும், திருநயினார்குரிச்சி அணியும் மோதியது. இதில் 30:17 என்ற புள்ளிக்கணக்கில் சேலம் ஏ.வி.எஸ். கல்லூரி அணி வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது.

ஆண்கள் பிரிவில் நடந்த இறுதி போட்டியில் சென்னை டி.பி. ஜெயின் அணிக்கும், தூத்துக்குடி என்.எப்.சி. அணியும் மோதியதில் 47:17 என்ற புள்ளி கணக்கில் சென்னை டி.பி. ஜெயின் அணி வெற்றி பெற்று ரெடீமர்ஸ் கோப்பையை தட்டி சென்றது. மகளிர் பிரிவில் நடந்த இறுதி போட்டியில் திருப்பூர் ஜெயசித்ரா கல்லூரி அணியும், சேலம் ஏ.வி.எஸ். கல்லூரி அணியும் மோதியதில் 23:16 என்ற புள்ளி கணக்கில் திருப்பூர் ஜெயசித்ரா கல்லூரி அணி வெற்றி பெற்று ரெடீமர்ஸ் கோப்பையை தட்டி சென்றது.

ஆண்கள் அணியில் முதலிடத்தை பெற்ற சென்னை டி.பி. ஜெயின் அணிக்கு ரெடீமர்ஸ் கோப்பையும், ரூ.50 ஆயிரமும், 2வது இடத்தை பெற்ற தூத்துக்குடி என்.எப்.சி. அணிக்கு ரூ.25 ஆயிரமும், 3வது இடங்களை பிடித்த தென்திருப்பேரை ஜாலி பிரண்ட்ஸ் அணிக்கும், அலந்தங்கரை ஏடூஇசட் அணிக்கும் தலா 20 ஆயிரமும், மகளிர் அணியில் முதலிடத்தை பெற்ற திருப்பூர் ஜெயசித்ரா அணிக்கு ரெடீமர்ஸ் கோப்பையும், ரூ.40 ஆயிரமும், 2வது இடத்தை பெற்ற சேலம் ஏ.வி.எஸ். அணிக்கு ரூ.25 ஆயிரமும், 3வது இடங்களை பெற்ற தூத்துக்குடி வி.வி.டி. அணிக்கும், நாகர்கோவில் திருநயினார் குறிச்சி அணிக்கும் தலா 10 ஆயிரமும் வழங்கப்பட்டது. பரிசுகளை அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ., நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் ஊழியநிறுவனர் மோகன் சி. லாசரஸ், மோகன் சி லாசரஸின் துணைவியார் ஜாய்ஸ் லாசரஸ் ஆகியோர் வழங்கினர்.

விழாவில் ஆழ்வார்திருநகரி யூனியன் தலைவர் ஜனகர், திமுக மாநில மாணவரணி துணை செயலாளர் உமரிசங்கர், ஆழ்வை ஒன்றிய செயலாளர் நவீன்குமார், தூத்துக்குடி யூனியன் தலைவர் அம்பாசங்கர், ஓட்டப்பிடாரம் பஞ்., தலைவர் இளையராஜா, மாவட்ட இளைஞரணி வக்கீல் ஜோதிராஜா, மாவட்ட தொண்டரணி அமைப்பாளர் சுப்பிரமணியன், வழக்கறிஞர் அணி கிருபாகரன், நாலுமாவடி பஞ்., தலைவர் இசக்கிமுத்து, துணைத்தலைவர் ராஜேஷ், புறையூர் பஞ்., தலைவர் செல்வக்குமார், ராஜபதி பஞ்., தலைவர் சவுந்தரராஜன், நாலுமாவடி காமராஜ் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் திருநீலகண்டன், தூத்துக்குடி மாவட்ட அமைச்சூர் கபடி கழக செயலாளர் கிறிஸ்டோபர் ராஜன், பொருளாளர் ஜிம்ரிவ்ஸ், நாலுமாவடி முருகேசபாண்டியன் உட்பட பலர் கலந்து கொண்டனர். தேசிய, மாநில நடுவர்கள் போட்டிகளில் பணியாற்றினர். பார்வையாளர்கள் 35 பேருக்கு குலுக்கல் முறையில் சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டன. ஏற்பாடுகளை நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் ஊழிய நிறுவனர் மோகன் சி. லாசரஸ் தலைமையில் போட்டி ஒருங்கிணைப்பாளரும், அர்ஜுனா விருது பெற்ற வீரரும், பாரதிதாசன் பல்கலைக்கழக செனட் உறுப்பினருமான மணத்தி கணேசன் மற்றும் இயேசு விடுவிக்கிறார் ஊழிய பொதுமேலாளர் செல்வக்குமார், நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் ஊழிய விளையாட்டுத்துறை நிர்வாகிகள் மணத்தி எட்வின், ஜேம்ஸ் மற்றும் ஊழியர்கள் செய்திருந்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

சேகர தலைவரை தாக்கிய முன்னாள் ஊழியர் கைது

புதன் 30, செப்டம்பர் 2020 11:02:19 AM (IST)

Sponsored Ads

Anbu CommunicationsBlack Forest Cakes


Thoothukudi Business Directory