» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

காமராஜ் கல்லூரியில் பிட் இந்தியா சைக்கிள் பேரணி

சனி 18, ஜனவரி 2020 1:09:42 PM (IST)தூத்துக்குடி காமராஜ் கல்லூரி நாட்டு நலப்பணித்திட்டத்தின் சார்பில் பிரதமர் மோடியின் பிட் இந்தியா இயக்கம் கடை பிடிக்கப்பட்டது. 

தூத்துக்குடி காமராஜ் கல்லூரி நாட்டு நலப்பணித்திட்டத்தின் சார்பில் பிட் இந்தியா இயக்கம் கடைபிடிக்கப்பட்டது.  நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் நாட்டு நலப் பணித்திட்ட அணி 54ல் திட்ட அதிகாரி தேவராஜ் வரவேற்றார். பல்கலைக் கழக நாட்டு நலப்பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர் ராஜரத்தினம்; முன்னிலை வகித்தார். காமராஜ் கல்லூரி முதல்வர் நாகராஜன் தலைமை வகித்தார். இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக தூத்துக்குடி மாவட்ட காவல்துறை துணை கண்காணிப்பாளர் பிரகாஷ் வருகை புரிந்து மாணவர்களுக்கு உடல் நலம் மற்றும் மனநலம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார். 

தினமும் உடற்பயிற்சி போன்று தினமும் ஒரு மணிநேரம் சைக்கிள் பயிற்சி அவசியம் என்று எடுத்துரைத்தார். நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள், பள்ளி மாணவர்கள் மற்றும் தன்னார்வலர்கள் என 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட சைக்கிள் பேரணியினை கொடியசைத்து துவங்கி வைத்தார். இப்பேரணியானது காமராஜ் கல்லூரியில் தொடங்கி தருவை மைதானத்தின் வழியாக காமராஜ் கல்லூரியினை அடைந்தது. நாட்டு நலப் பணித்த்திட்ட அதிகாரி பொன்னுத்தாய் நன்றி கூறினார்.  நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை காமராஜ் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர்கள் செய்திருந்தனர்.  


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

ஆட்டோவில் ஆடு திருட முயன்றவர்கள் கைது

ஞாயிறு 16, பிப்ரவரி 2020 11:41:54 AM (IST)

Sponsored AdsAnbu Communications

Thoothukudi Business Directory