» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் கால்பந்தாட்ட போட்டிகள் : மாவட்ட எஸ்பி., துவக்கி வைத்தார்

சனி 18, ஜனவரி 2020 11:58:28 AM (IST)தூத்துக்குடி ஸ்பிரிட்டட் யூத்ஸ் கால்பந்து கழகத்தின் 50வது ஆண்டு துவக்க விழா இன்று தூத்துக்குடி தருவை மைதானத்தில் நடைபெற்ற கால்பந்தாட்ட போட்டியை தூத்துக்குடி மாவட்ட எஸ்பி., அருண் பாலகோபாலன் தலைமை விருந்தினராக கலந்துகொண்டு சிறப்புரையாற்றி துவக்கி வைத்தார்.

இன்று (18ம் தேதி) தூத்துக்குடி தருவை மைதானத்தில் ஸ்பிரிட்டட் யூத்ஸ் கால்பந்தாட்ட தூத்துக்குடி கிளப்பின் பொன்விழா ஆண்டு துவக்க விழா கால்பந்தாட்ட போட்டியை தூத்துக்குடி மாவட்ட எஸ்பி.. அருண் பாலகோபாலன் தலைமை விருந்தினராக கலந்து கொண்டு ஸ்பிரிட்டட் கால்பந்தாட்ட கிளப்பின் அடையாளமான, அதன் லோகோவை, வெளியிட்டு கால்பந்தாட்ட குழுவினர் மற்றும் கால்பந்தாட்ட வீரர்களையும் ஊக்குவித்து சிறப்புரையாற்றினார்.பின் கால்பந்தாட்ட வீரர்களை வாழ்த்தி, வெண்புறாவை பறக்க விட்டு கால்பந்தாட்ட விளையாட்டு போட்டியை மாவட்ட எஸ்பி., கோல் போட்டு துவக்கி வைத்தார். பின் கால்பந்தாட்ட கிளப்பின் நினைவாக தருவை மைதானத்தின் முன்பு மரம் நட்டார்.

இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு கால்பந்தாட்ட கழக தலைவர் ஜேசையா வில்லவராயர், மாவட்ட விளையாட்டு அதிகாரி பேட்ரிக், கால்பந்தாட்ட கிளப் தலைவர் பிரின்ஸ்டன் பர்னாந்து, செயலாளர் மெரின்டோ வி. ராயன், பொருளாளர் ஆரோக்கியராஜ், தாமஸ்பாலன், நிறுவனர் ஜெயராஜ், கிளப் உறுப்பினர்கள், கால்பந்தாட்ட வீரர்கள், மத்திய பாகம் இன்ஸ்பெக்டர் ஜெயப்பிரகாஷ், முத்தையாபுரம் இன்ஸ்பெக்டர் அன்னராஜ், வடபாகம் இன்ஸ்பெக்டர் அருள், அனைத்து மகளிர் இன்ஸ்பெக்டர் வனிதா மற்றும் காவல்துறையினர் கலந்துகொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Black Forest Cakes

Anbu Communications
Thoothukudi Business Directory