» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் லாரி - கார் மோதிய விபத்து : அக்கா ‍‍- தம்பி உட்பட 4பேர் பலி

சனி 18, ஜனவரி 2020 7:59:58 AM (IST)தூத்துக்குடியில் கார் மீது லாரி மோதி விபத்துக்குள்ளானதில் 2  4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

சென்னை அடையாரைச் சேர்ந்தவர் சுபாஷ் சந்திரபோஸ்.  சுபாஷ் சந்திரபோசின் மகள் கவிதா, இவருக்கு ரம்யா (20) வீரேந்திரன் (17) என மகளும், மகனும் உள்ளனர். கவிதாவின் கணவர் ஆனந்த் இறந்துவிட்டார். இந்நிலையில் சுபாஷ் சந்திரபோஸ், கவிதா மற்றும் அவரது குடும்பத்தினர் இரண்டு கார்களில் பொங்கல் விடுமுறையை முன்னிட்டு திருச்செந்தூர் கோயிலுக்கு வந்துள்ளனர். இதில் ரம்யா, வீரேந்திரன் மற்றும் ரம்யாவின் தோழி சென்னை நங்கநல்லுாரை சேர்ந்த பார்க்கவி (23) ஆகியோர் வந்த காரை திருச்சி அம்மாபேட்டையை சேர்ந்த  ஐயங்காளை என்பவரது மகன் ஜோவன் (30)  ஓட்டி வந்தார். இந்த கார் தூத்துக்குடி மடத்தூர் ரோட்டில் ஸ்டெர்லைட் ஆலை எதிரே உள்ள ரயில்வே மேம்பாலத்தில் சென்றது. தற்போது பாலத்தில் வேலை நடந்து வருவதால், அந்த பகுதி ஒரு வழி பாதையாக உள்ளது. 

அப்போது எதிரே  தூத்துக்குடியிலிருந்து மதுரைக்கு சென்ற கண்டெய்னர் லாரி மீது கார் மீது மோதியது. இவ்விபத்தில் காரில் பயணம் செய்த ரம்யா, வீரேந்திரன் ரம்யாவின் தோழி பார்கவி, மற்றும் டிரைவர் ஜோவன் ஆகிய 4பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். கார் அப்பளம் போல் நொறுங்கியது. இதுகுறித்து தகவல் அறிந்து தீயணைப்பு நிலையத்தினர் விரைந்து வந்து மீட்பு  பணியில் ஈடுபட்டனர். தூத்துக்குடி மாவட்ட எஸ்பி அருண் பாலகோபாலன், ரூரல் டிஎஸ்பி கலைக்கதிரவன், சிப்காட் இன்ஸ்பெக்டர் முத்து சுப்பிரமணியன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். 

உயிரிழந்தவர்களின் உடல் பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. கார் விபத்தில்  4 பேர் உயிரிழந்த சம்பவம் தூத்துக்குடி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சுபாஷ் சந்திரபாஷ், அவரது மனைவி பிரபா மற்றும் மகள் கவிதா ஆகியோர் மற்றொரு காரில் வந்ததால் விபத்தில் இருந்து உயிர் தப்பினர். விபத்து குறித்து தூத்துக்குடி சிப்காட் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


மக்கள் கருத்து

RAJANJan 18, 2020 - 12:12:15 PM | Posted IP 108.1*****

எல்லாம் பாலம் தான் காரணம். எத்தனை வருஷம் ஆகுது சரிபண்ணல

RAJANJan 18, 2020 - 10:28:57 AM | Posted IP 108.1*****

CAR OVER SPEED

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Anbu Communications


Black Forest Cakes


Thoothukudi Business Directory