» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

அம்மா இளைஞர் விளையாட்டு திட்டம்: அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ தொடங்கி வைத்தார்

செவ்வாய் 14, ஜனவரி 2020 5:12:08 PM (IST)பெருங்குளம் பேரூராட்சியில் அம்மா இளைஞர் விளையாட்டு திட்டத்தினை செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ தொடங்கி வைத்தார்.

தூத்துக்குடி மாவட்டம் பெருங்குளம் பேரூராட்சியில் விளையாட்டு துறை மூலம் தமிழக முதலமைச்சரின் அம்மா இளைஞர் விளையாட்டு திட்ட துவக்க விழா மாவட்ட ஆட்சியர் (பொறுப்பு) ப.விஷ்ணு சந்திரன், தலைமையில் இன்று நடைபெற்றது. விழாவிற்கு திருவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி. சண்முகநாதன் முன்னிலை வகித்தார். இவ்விழாவில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ கலந்துகொண்டு அம்மா இளைஞர் விளையாட்டு திட்டத்தினை தூத்துக்குடி மாவட்டத்தில் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார்.

இவ்விழாவில் அமைச்சர் பேசியதாவது: அம்மா 2011ம் ஆண்டில் முதலமைச்சராக பொறுப்பேற்ற பொழுது தமிழகத்தில் அறிவுசார் வளர்ச்சியை தூண்டும் விதத்தில் பள்ளி கல்விதுறைக்கு அதிக அளவில் நிதி ஒதுக்கீடு செய்து பல்வேறு திட்டங்களை செயல்படுத்தினார். கல்வி துறையை ஊக்கப்படுத்தியதுபோல தமிழகத்தில் விளையாட்டு வீரர்களின் தனித்திறமைகளை கண்டறிந்து ஊக்கப்படுத்தும் விதமாக விளையாட்டு துறையில் பல்வேறு மேம்பாட்டு திட்டங்களை செயல்படுத்தியதோடு மட்டுமின்றி விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்கும் வகையில் ஒலிம்பிக்கில் தங்கம் வென்றால் ரூ.3 கோடி ரொக்கப் பரிசும், வெள்ளி வென்றால் ரூ.2 கோடி ரொக்கப்பரிசும், வெண்கலம் வென்றால் ரூ.1 கோடி ரொக்கப்பரிசும் வழங்கப்படும் என அறிவித்து செயல்படுத்தினார்கள். 

இதன்மூலம் மாற்றுத்திறனாளியான மாரியப்பன் பாரா ஒலிம்பிக்கில் தங்கம் வென்று ரொக்கப்பரிசு பெற்றுள்ளார்கள். அம்மா வழியில் வந்த தமிழக முதலமைச்சர் கிராமபுறங்களில் இளைஞர்களின் விளையாட்டு திறனை மேம்படுத்தும் வகையிலும் இளைஞர்கள் உடற்பயிற்சியை தூண்டும் வகையிலும் அம்மா இளைஞர் விளையாட்டு திட்டத்தினை கொண்டு வந்துள்ளார்கள். இத்திட்டத்தினை நேற்று தமிழக முதலமைச்சர் சென்னையில் காணொலி காட்சி மூலம் துவக்கி வைத்தார்கள். தொடர்ந்து மாவட்டங்களில் துறை அமைச்சர்கள் சென்று துவக்கி வைத்திட அறிவுறுத்தியதன் அடிப்படையில் தூத்துக்குடி மாவட்டத்தில் இத்திட்டம் திருவைகுண்டம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பெருங்குளத்தில் நடைபெறும் இவ்விழாவில் துவங்கி வைக்கப்படுகிறது. 

தமிழகம் முழுவதும் உள்ள 13052 கிராம ஊராட்சிகள், 524 பேருராட்சிகளிலும் ரூ.76.23 கோடி நிதி ஒதுக்கீட்டின் மூலம் செயல்படுத்தப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் 403 கிராம ஊராட்சிகள், 19 பேருராட்சிகளிலும் இத்திட்டம் துவக்கி வைக்கப்பட்டுள்ளது. நமது பாராம்பரிய விளையாட்டு விளையாட்டான கபடியுடன் வாலிபால் மற்றும் கிரிக்கெட் அல்லது பேட்மிட்டன் ஆகிய ஏதேனும் 3 விளையாட்டுகளுக்கு மைதானங்கள் அமைக்கப்பட்டு;ள்ளது. குறைந்தது 15 வயது முதல் 35 வயதுக்குள் உள்ள ஆண், பெண் இருபாலரும் பங்கேற்கும் வகையில் ஒவ்வொரு விளையாட்டிற்கும் 17 நபர்கள் தேர்வு செய்யப்பட்டு கலந்துகொள்ளலாம். இந்த விளையாட்டிற்கு ஊராட்சி செயல் அலுவலர்கள் மற்றும் பேருராட்சி செயல் அலுவலரிடம்; தங்களது பெயர்களை பதிவு செய்து கொள்ளலாம். 

விளையாட்டு மற்றும் உடற்பயிற்சிக்கு தேவையான உபகரணங்களை விளையாட்டு துறை மூலம் வழங்கப்படும். வருடத்திற்கு ஒரு முறை ஒன்றிய அளவிலும், மாவட்ட அளவிலும், மாநில அளவிலும் போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்படுகிறது. இத்திட்டம் தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டு தூத்துக்குடி மாவட்ட அளவில், மாநில அளவில் மட்டுமின்றி தேசிய அளவிலும் பல்வேறு விருதுகளை பெற்று சிறந்த வீரர், வீராங்கனைகளை உருவாக்கி சாதனை புரிய வேண்டும். மேலும் ஒலிம்பிக் உள்ளிட்ட போட்டிகளிலும் வெற்றி பெற்று நமது நாட்டிற்கு பெருமை சேர்க்க வேண்டும். கிராம பகுதியில் இவ்விளையாட்டு சாதி, மத, பேதமின்றி நடைபெறுவதால் சமுதாய நல்லிணக்கம் மற்றும் ஒற்றுமை ஏற்படுத்தும் வகையில் தமிழ்நாடு முதலமைச்சர் இத்திட்டத்தை துவக்கி வைத்துள்ளார்கள். இளைஞர்கள் இக்களத்தினை பயன்படுத்தி தனித்திறன்களை வெளிக்கொணர வேண்டும் என அமைச்சர் பேசினார்.

இவ்விழாவில் மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் மோகன், மாவட்ட ஊராட்சி துணைத் தலைவர் பி.செல்வக்குமார், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் இரா.சுதாகர், திருச்செந்தூர் வருவாய் கோட்டாட்சியர் தனப்பிரியா, திருவைகுண்டம் ஒன்றிய குழு தலைவர் எஸ்.வசந்தா, பேரூராட்சிகளின் உதவி செயற்பொறியாளர் முகமது ஷெரீப், மாவட்ட விளையாட்டு அலுவலர் டி.வி.பாட்ரிக், பேருராட்சி செயல் அலுவலர் ரமேசுபாபு, திருச்செந்தூர் ஒன்றியக் குழுத்தலைவர் வடமலைப்பாண்டியன், துணைத்தலைவர் விஜயண், முன்னாள் பால்வளத்தலைவர் ஆறுமுகநயினார், செரினாபாக்கியராஜ், சாத்தான்குளம் ஒன்றியக் குழுத்தலைவர் ஜெயபதி, துணைத் தலைவர் அய்யாத்துறை, மாவட்ட கவுன்சிலர் அழகேசன் வின்னரசி மற்றும் அலுவலர்கள், முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads


Anbu Communications
Black Forest Cakes

Thoothukudi Business Directory