» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

காணும் பொங்கலை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் : தூத்துக்குடி எஸ்பி அறிவிப்பு

செவ்வாய் 14, ஜனவரி 2020 3:31:37 PM (IST)

காணும் பொங்கல் தினத்தன்று தூத்துக்குடி மாவட்டத்தில் பொதுமக்கள் சுற்றுலா நிமித்தமாக கூடுமிடங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது என மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  அருண் பாலகோபாலன் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

பொங்கல் திருநாளை முன்னிட்டு காணும் பொங்கல் (16.01.2020) அன்று தூத்துக்குடி மாவட்டத்தில் பொதுமக்கள் அருகில் உள்ள இடங்களுக்கு சுற்றுலா செல்வது வழக்கமாக உள்ளது. அவ்வாறு பொதுமக்கள் சுற்றுலா சென்று கூடுமிடங்களாக தூத்துக்குடி மாவட்டத்தில் தூத்துக்குடி முத்துநகர் பீச், நேரு பூங்கா, தெர்மல்நகர் பீச், முயல்தீவு, திருச்செந்தூர் கடற்கரை, மணப்பாடு கடற்கரை, மேலபுதுக்குடி அருஞ்சுனை காத்த அய்யனார் கோவில், கோவில்பட்டி செண்பகவல்லியம்மன் கோவில், குருமலை அய்யனார் கோவில் உட்பட தூத்துக்குடி காவல் உட்கோட்டத்தில் 10 இடங்களும், தூத்துக்குடி ஊரகத்தில் 2 இடங்களும், திருச்செந்தூர் உட்கோட்டத்தில் 5 இடங்களும், ஸ்ரீவைகுண்டம் உட்கோட்டத்தில் 3 இடங்களும், மணியாச்சியில் 1 இடமும், கோவில்பட்டி உட்கோட்டத்தில் 7 இடங்களும், விளாத்திக்குளத்தில் 11 இடங்களும் மற்றும் சாத்தான்குளத்தில் 2 இடங்கள் என மொத்தம் 41 இடங்கள் கண்டறியப்பட்டு டி.எஸ்.பிக்கள் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் மேற்பார்வையில் சுமார் 1000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தபடவுள்ளனர்.

யாரும் மது போதையில் வாகனங்கள் ஓட்டக்கூடாது, இரு சக்கர வாகனத்தில் செல்பவர்கள் தேவையில்லாமல் சத்தம் கொடுத்துக்கொண்டோ, அதிக அளவு ஒலிப்பான்களை எழுப்பிக்கொண்டோ, வாகனங்களில் போட்டி போட்டுக்கொண்டோ சாலையில் நடந்து செல்லும் பொதுமக்கள் பீதியடையும் வகையில் வாகனங்களை ஓட்டக்கூடாது. மேலும் இரு சக்கர வாகனத்தில் செல்பவர்களும், பின் இருக்கையில் அமர்ந்து செல்பவர்களும் கட்டாயம் ஹெல்மெட் அணிந்து செல்லவேண்டும். நான்கு சக்கர வாகனம் ஓட்டுபவர்கள் சீட் பெல்ட் அணிந்து செல்லவேண்டும்.

பொது இடங்களில் மது அருந்துதல், பொது அமைதிக்கு பங்கம் விளைவித்தல் போன்ற எவ்வித சட்ட விரோத செயல்களில் யாரும் ஈடுபடக்கூடாது. அவ்வாறு சட்டவிரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது சட்டப்படி கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பொதுமக்கள் காவல்துறையின் அவசர உதவிக்கு ஆண்ட்ராய்டு மொபைல் போன் வைத்திருப்பவர்கள் "காவலன் எஸ்.ஓ.எஸ் என்ற செயலியை பயன்படுத்தி நீங்கள் ஆபத்தில் இருப்பதை, அதிலுள்ள பொத்தானை அழுத்துவதன் மூலம் மிக எளிதாக காவல்துறைக்கும் உங்கள் உறவினர்களுக்கும் தகவல் கொடுத்து உங்களை காப்பாற்றிக் கொள்ளமுடியும்.

மேலும் சட்டவிரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் குறித்த தகவலோ அல்லது பொதுமக்கள் காவல்துறையின் அவசர உதவிக்கோ தொலைபேசி எண். 100 மற்றும் 95141 44100 என்ற அலைபேசி எண் ஆகியவற்றை தொடர்பு கொண்டால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  அருண் பாலகோபாலன், தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

சேகர தலைவரை தாக்கிய முன்னாள் ஊழியர் கைது

புதன் 30, செப்டம்பர் 2020 11:02:19 AM (IST)

Sponsored Ads
Black Forest Cakes


Anbu Communications
Thoothukudi Business Directory