» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

அம்மா இருசக்கர வாகன பழுது பார்த்தல் பயிற்சிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

செவ்வாய் 14, ஜனவரி 2020 3:22:48 PM (IST)

திருச்செந்தூர், அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் அம்மா இருசக்கர வாகன பழுது பார்த்தல் மற்றும் பராமரிப்பு குறுகிய கால பயிற்சிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

திருச்செந்தூர் அரசினர் தொழிற்பயிற்சி நிலைய முதல்வர் அருள் தகவல்:  தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அறிவிப்பின்படி அம்மா இருசக்கர வாகன பழுதுபார்த்தல் மற்றும் பராமரிப்பு மையம் மூலம் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களின் பள்ளி படிப்பை பாதியில் நிறுத்தியவர்களுக்கும் திருச்செந்தூர், அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் அம்மா இருசக்கர வாகன பழுது பார்த்தல் மற்றும் பராமரிப்பு குறுகிய கால பயிற்சி 300 மணி நேரம் தொடங்கப்பட உள்ளது. அதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விண்ணப்பக்கட்டணம் ஏதும் இல்லை. விண்ணப்பிக்க விரும்புவோர் 31.01.2020-க்குள் அரசு வேலை நாட்களில் நேரடியாக காலை 10.00 மணியளவில் வந்து விண்ணப்பிக்கலாம்

பயிற்சி திட்டத்தில் சேர்வதற்கான தகுதிகள்

1. குறைந்த பட்ச கல்வித்தகுதி 5-ம் வகுப்பு தேர்ச்சி

2. குறைந்த பட்சம் 18 வயது நிரம்பியவராக இருத்தல் வேண்டும்.

3. மொத்த பயிற்சிக்காலம் 300 மணி நேரம்.

விண்ணப்ப படிவத்துடன் இணைக்க வேண்டிய ஒளிநகல்கள் (Xerox )

1. மாற்றுச்சான்றிதழ் (T.C ) - 1 எண்

2. மதிப்பெண் பட்டியல்   - 1 எண்

3. சாதி சான்றிதழ்  - 1 எண்

4. ஆதார் அட்டை  - 1 எண்

5. குடும்ப அட்டை  - 1 எண்

6. புகைப்படம்   - 3 எண்கள்

பயிற்சியானது அரசு வேலை நாட்களில் தினமும் 8 மணி நேரம் பயிற்சி வழங்கப்படும். பெண்கள், ஆதரவற்ற விதவைகள், மாற்றுத்திறனாளிகள் மாற்றுப் பாலினத்தவர் மற்றும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர்க்கு முன்னுரிமை வழங்கப்படும் பயிற்சி பெறும் மாணவர்களுக்கு தினந்தோறும் போக்குவரத்துப்படி ரூ100 வழங்கப்படும். பயிற்சி முடித்தவர்களுக்கு தனியார் நிறுவனங்களில் உரிய வேலை வாய்ப்பு பெறத்தக்க சான்றிதழ் வழங்கப்படும். மேலும் விபரங்களுக்கு 8695047687 என்ற கைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம். எனவே இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்தி அரசால் வழங்கப்படும் சலுகைகளையும் பெற்று இளைஞர்கள் சிறப்பான எதிர்காலத்தை அமைத்துக் கொள்ளுமாறு திருச்செந்தூர் அரசினர் தொழிற்பயிற்சி நிலைய முதல்வர் அருள் தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored Ads


Black Forest Cakes

Anbu Communications
Thoothukudi Business Directory