» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

காவல்துறையினரின் வாரிசுகளுக்கு கல்வி உதவித் தொகை : எஸ்பி வழங்கினார்

செவ்வாய் 14, ஜனவரி 2020 3:12:57 PM (IST)மாநில அளவில் அதிக மதிப்பெண் பெற்ற காவல்துறையில் பணியாற்றி வரும் வாரிசுகளுக்கு சிறப்பு கல்வி உதவித் தொகையை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண் பாலகோபாலன் வழங்கினார்.

தமிழக காவல்துறையில் பணியாற்றி வரும் காவல்துறையினரின் குழந்தைகள் மேல் நிலைப்பள்ளிப் படிப்பில் மாநில அளவில் முதல் 100 இடங்களைப் பிடித்துள்ளவர்களை ஒவ்வொரு ஆண்டும் தேர்வு செய்து, அவர்களின் உயர் கல்வி படிப்பு முடியும் வரை ஒவ்வொரு ஆண்டும் சிறப்பு கல்வி உதவித்தொகையாக ரூபாய் 25,000/- வரை வழங்கப்படும். 

இதன்படி 2019-2020ம் ஆண்டுக்கு தூத்துக்குடி மாவட்டத்தில் பணியாற்றி வரும் உதவி ஆய்வாளர்கள் ஜார்ஜ் லிவிங்ஸ்டன் மகள் ஜில்பின் லிஜோ, சக்திவேல் மகன் கார்த்திக் ராஜா, விஜயகுமார் மகள் சபரிதா, அனைந்தபெருமாள் மகன் சுரேஷ்குமார், ஜெயராம சுப்பிரமணியன் மகன் பாலசுப்பிரமணியன், ராஜ்குமார் மகள் நிவேதா, தலைமை காவலர்கள் கண்ணன் மகள் சிதம்பர செல்வி, காவல்துறை அமைச்சுப்பணி கண்காணிப்பாளர்கள் சுப்பிரமணியன் மகன் ஆதிபிரகாஷ், நம்பிராஜன் மகன் லோகேஷ், இந்திரா காந்தி மகள் ரமலி ராமலெட்சுமி, உதவியாளர் கிருஷ்ணம்மாள் மகன் பிரசாந்த் மாரியப்பன் ஆகியோருக்கு சிறப்பு கல்வி உதவித்தொகையை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண் பாலகோபாலன் வழங்கி, அனைத்து துறைகளிலும் சிறந்து விளங்க வாழ்த்தினார். இந்நிகழ்ச்சியில் தூத்துக்குடி காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் குமார், அலுவலக கண்காணிப்பாளர் மாரியப்பன் மற்றும் போலீஸ் பி.ஆர்.ஓ சத்திய நாராயணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads

Anbu Communications


Black Forest Cakes
Thoothukudi Business Directory