» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

பள்ளி விடப்பட்டதால் கடும் போக்குவரத்து நெரிசல் : மாணவ மாணவிகள், பொதுமக்கள் அவதி

செவ்வாய் 14, ஜனவரி 2020 1:38:15 PM (IST)தூத்துக்குடி பெண்கள் பள்ளியில் இன்று மதியம் அனைவரையும் ஒரே நேரத்தில் திறந்து விடப்பட்டதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

தூத்துக்குடி மார்க்கெட் சிக்னல் அருகே சுப்பையா வித்யாலயம் பெண்கள் பள்ளி இயங்கி வருகிறது. இங்கு ஏராளமான மாணவிகள் படித்து வருகின்றனர். நாளை பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் போகிப் பண்டிகையான இன்று மதியம் 1 மணியளவில் பள்ளி முடிந்து அனைத்து வகுப்பு படிக்கும் மாணவிகளும் ஒரே நேரத்தில் வெளியே வந்ததால் அப்பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. 

மாணவிகள், அவர்களை அழைத்து செல்ல வந்த பெற்றோர், ஆட்டோக்கள், பிற பொதுமக்கள் என அனைவரும் ஒரே நேரத்தில் அங்கு இருந்ததால் மேற்கொண்டு செல்ல இயலாமல் மெதுவாக ஊர்ந்தபடியே வாகனங்கள் சென்றன. சுமார் 30 மீ தூரத்தை கடக்கவே முக்கால் மணி நேரம் ஆகியது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே மார்க்கெட் பகுதியில் பொங்கல் சீசன் கடைகள் போடப்பட்டுள்ளதால் அங்கு பாெருட்கள் வாங்குவதற்காக மக்கள் கூட்டமாக வந்து செல்லும் நிலையில் மாணவிகளின் கூட்டத்தில் அந்த சாலையே திக்கு முக்காடியது. 

பள்ளி அமைந்துள்ள சாலை மிக குறுகிய சாலை என்பது குறிப்பிடத்தக்கது. இது குறித்து அறிந்ததும் போக்குவரத்து காவலர் ஒருவர் அங்கு வந்து போக்குவரத்தை சீர்படுத்தினார். கூட்ட நெரிசலை தவிர்க்க சற்று இடைவெளி விட்டு வகுப்பு வாரியாக மாணவிகளை வீட்டிற்கு செல்ல அனுமதித்திருக்கலாம் என அங்கிருந்த பெற்றோர், பொதுமக்கள் தெரிவித்தனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsAnbu Communications

Black Forest CakesThoothukudi Business Directory