» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

அமித்ஷா பேச்சால் பொது மக்கள் அச்சமடைந்துள்ளனர் : காதர்மொய்தீன் பேட்டி

செவ்வாய் 14, ஜனவரி 2020 1:13:50 PM (IST)இந்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா என்ஆர்சி சட்டம் பற்றி பேசிவரும் பேச்சுகளால் நாட்டு மக்கள் அனைவரும் அச்சமடைந்துள்ளனர் என்று இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசிய தலைவர் பேராசிரியர் காதர் மொய்தீன் தெரிவித்துள்ளார்.

தென்காசியில் நடைபெற்ற இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி சார்பில் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்ட அக்கட்சியின் தேசிய தலைவர் பேராசிரியர் காதர் மொய்தீன் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் சில பகுதிகளில் மட்டும் உள்ளாட்சி தேர்தல் நடந்து முடிந்த நிலையில் விரைவில் வார்டு வரையரைகளை முடித்து மீதமுள்ள  9 மாவட்டங்களில் மட்டுமன்றி தமிழகம் முழுவதும் பேரூராட்சி நகராட்சி மாநகராட்சி தேர்தல்களையும் நியாயமான முறையில்  நடத்த வேண்டும்

மத்திய அரசு கொண்டு வந்துள்ள இந்திய குடியுரிமை சட்டத்தை திருத்தி அமைக்க வேண்டும் அல்லது திரும்ப பெற வேண்டும் . அசாம் மாநிலத்தில் உள்ள  என்.ஆர்.சி.சட்டத்தை இந்தியாவில் உள்ள மற்ற மாநிலத்திற்க்கும் கொண்டு வருவோம் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசிவருவது மிகவும் கண்டனத்துக்குரியது. இந்த  பேச்சை அவர் நிறுத்த வேண்டும். இதனால் நாட்டு மக்கள் மிகுந்த அச்சம் அடைந்து உள்ளனர். எனவே அமித்ஷா  இது போன்ற பேச்சுக்களை கைவிடவேண்டும்.இந்திய பொருளாதாரம் இதுவரை இல்லாத அளவுக்கு மிகவும் வீழ்ச்சி அடைந்துள்ளது. இதனை மூடி மறைப்பதற்காகவே மத்திய அரசாங்கம் குடியுரிமை சட்டத்தை கையில் எடுத்துள்ளது. 

இந்திய குடியுரிமை சட்டம் முஸ்லிம்களுக்கு மட்டும் எதிரானது அல்ல இதில் அனைத்து தரப்பு மக்களும் பாதிக்கப்படுவார்கள். எனவே இந்திய குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை மத்திய அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.பேட்டியின்போது இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் மாநில பொதுச் செயலாளரும்  கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினருமான முகம்மது அபூபக்கர், மாநில பொருளாளர் ஷாஜஹான், மாநில செயலாளர்கள் நெல்லை மஜீத், நிஜாம் முகைதீன், மாவட்ட தலைவர் செய்யது சுலைமான், மாவட்ட செயலாளர் இக்பால், செய்தி தொடர்பாளர் முகம்மதுஅலி உட்பட பலர் உடன் இருந்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored AdsBlack Forest Cakes

Anbu CommunicationsThoothukudi Business Directory