» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில் பொது மேலாளர் பணி : விண்ணப்பங்கள் வரவேற்பு

செவ்வாய் 14, ஜனவரி 2020 11:50:25 AM (IST)

தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில் (TMB) காலியாக உள்ள பொது மேலாளர், இணை பொது மேலாளர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடங்களுக்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் வரும் 24ம் தேதிக்குள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

பணி மற்றும் காலிப் பணியிட விபரம்

பொது மேலாளர் / CTO (தகவல் தொழில்நுட்பம்)

ஊதியம் : மாதம் ரூ.1,40,000

இணைப் பொது மேலாளர் (தகவல் தொழில்நுட்பம்)

ஊதியம் : ரூ.1,25,000

Graduate in Law (Legal)

ஊதியம் : மாதம் ரூ.1,00,000

இணைப் பொது மேலாளர் (Credit)

ஊதியம் : மாதம் ரூ.1,25,000

தகுதி : மேற்குறிப்பிட்ட பணியில் ஏற்கனவே தனியார் அல்லது பொதுத்துறை வங்கிகளில் பணி அனுபவம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு : 45 வயதிற்கு உட்பட்டவர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

தேர்வு முறை : விண்ணப்பதாரர்களில் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை : இப்பணியிடங்களுக்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் www.tmb.in என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்பப் படிவத்தினைப் பெற்று, பூர்த்தி செய்த விண்ணப்பத்துடன் தேவையான அனைத்து சான்றிதழ்களின் நகல்களையும் இணைத்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அஞ்சல் வழியாக விண்ணப்பிக்க வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி :

The General manager,

Human Resources Development,

Tamilnadu Mercantile Bank Limited,

Head Office, #57, V.E.Road, Thoothukudi - 628 002.

விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி : 24.01.2020

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://www.tmbnet.in/tmb_careers/ என்னும் லிங்க்கை கிளிக் செய்யவும்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads

Anbu Communications

Black Forest Cakes

Thoothukudi Business Directory