» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

நாசரேத் காவல் நிலையத்தில் சமத்துவப் பொங்கல் விழா!

செவ்வாய் 14, ஜனவரி 2020 11:31:34 AM (IST)



நாசரேத் காவல் நிலையத்தில் சமத்துவப் பொங்கல் விழா கோலகாலமாக கொண்டாடப் பட்டது.
      
தூத்துக்குடி மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் அருண் கோபாலன் உத்திரவின் பேரில் துணை கண்காணிப்பாளர் பால்துரை ஆலோசனையின் பேரில் சரக அனைத்து காவல் நிலையங்களிலும் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. நாசரேத் காவல் நிலையத்தில் சமத்துவப் பொங்கல் விழா ஆய்வாளர் சகாயசாந்தி தலைமையில் கொண்டாடப்பட்டது. உதவி ஆய்வாளர்கள் தங்கேஷ்வரன், அனந்த முத்துராமன், சூரியன், அங்கப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

சிறப்பு அழைப்பாளர்களாக மூக்குப்பீறி ஊராட்சித் தலைவர் கமலா கலையரசு, உடையார்குளம் ஊராட்சி மன்றத் தலைவர் செல்லையா தேவராஜ், கச்சனாவிளை ஊராட்சிமன்றத் தலைவர் கிங்ஸ்டன், நகர அதிமுக செயலார் கிங்ஸ்லி, ஞானையா, கச்சனாவிளை புனித மரியன்னை நடுநிலைப் பள்ளி தாளாளர் நேன்சி, முதியோர் இல்ல மேலாளர் நியூபெல் ஜெபராஜ், சேக்ரட் சிறுவர் இல்ல காப்பாளர் இராஜேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர். விழாவில் காவலர்கள் பொங்கலிட்டு குலவையிட்டனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Anbu Communications

Black Forest Cakes







Thoothukudi Business Directory