» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

நாசரேத் மணிநகரில் பொங்கல் விழா கிரிக்கெட் போட்டி!

செவ்வாய் 14, ஜனவரி 2020 10:25:38 AM (IST)நாசரேத்-மணிநகரில் நடைபெற்ற பொங்கல் விழா கிரிக்கெட் போட்டியில் பாட்டக்கரை அணி முதல்பரிசினை தட்டிச் சென்றது.

தூத்துக்குடி மாவட்டம், நாசரேத்-மணிநகர் திரி ஸ்டார் கிரிக்கெட் கிளப் சார்பாக நாசரேத் சுற்று வட்டார கிரிக்கெட் அணிகள் பங்குபெற்ற நாசரேத் சுற்றுவட்டார பொங்கல்விழா கிரிக்கெட் போட்டி மணிநகர் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இதில் 16அணிகள் கலந்து கொண்டு ஆடியது. இறுதிப்போட்டியில் பாட்டக்கரை அணியும், மணிநகர் திரி ஸ்டார் அணியும் மோதின. இதில் பாட்டக்கரை அணி வெற்றி பெற்று முதல் பரிசினை தட்டிச் சென்றது. 

இரண்டாவது பரிசினை மணிநகர் திரி ஸ்டார் அணியும், மூன்றாவது பரிசினை மணிநகர் ரைசிங் ஸ்டார் அணியும், நான்காம் பரிசினை மாதாவனம் எப்.சி.சி. அணியும் வெற்றிபெற்றது. வெற்றிபெற்ற அணிகளுக்கு நாசரேத் பேரூராட்சி முன்னாள் தலைவர் அ.ரவி செல்வக்குமார், நாசரேத் உதவி ஆய்வாளர் தங்கேஸ்வரன், மணிநகர் வார்டு முன்னாள் கவுன்சிலர் விஜி,சுடலைமணி ஆகியோர் பரிசுகளை வழங்கினர். போட்டிக்கான ஏற்பாடுகளை மணிநகர், இலங்கேஷ்வரன், லிங்கம், ஜெபசெல்வின், ராமர், பிரகாஷ் ஆகியோர் செய்திருந்தனர். முடிவில் ஜெயகுமார் நன்றி கூறினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Black Forest Cakes
Anbu Communications


Nalam PasumaiyagamThoothukudi Business Directory