» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் மின்சாரம் பாய்ந்து வாலிபர் உயிரிழப்பு

திங்கள் 13, ஜனவரி 2020 5:01:56 PM (IST)

தூத்துக்குடியில் மோட்டார் பைக்கை வாட்டர் சர்வீஸ் செய்தபோது மின்சாரம் பாய்ந்து வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார். 

தூத்துக்குடி பூபாலராயர்புரத்தைச் சேர்ந்தவர் ராமசுந்தரம். இவரது மகன் மூக்கையா (17). டூவிலர் சர்வீஸ் கடை நடத்தி வந்தார். நேற்று ஒரு பைக்கை, மின் மோட்டார் மூலம் வாட்டர் சர்வீஸ் செய்து கொண்டிருந்தார். அப்போது, எதிர்பாரதவிதமாக அவர் மீது மின்சாரம் பாய்ந்து மயங்கி விழுந்தார். இதையடுத்து அவரை தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்து தூத்துக்குடி வடபாகம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Black Forest Cakes



Nalam Pasumaiyagam

Anbu Communications



Thoothukudi Business Directory