» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

அனல்மின்நிலைய ஒப்பந்ததாரர்கள் ஆர்ப்பாட்டம்

திங்கள் 13, ஜனவரி 2020 11:14:30 AM (IST)நிலுவை தொகையை வழங்க கோரி தூத்துக்குடி அனல்மின்நிலைய ஒப்பந்ததாரர்கள் சங்கம் சார்பில் கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தூத்துக்குடி அனல்மின்நிலைய நுழைவு வாயில் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சங்க தலைவர் அன்புராஜ் ஜெபசிங் தலைமை தாங்கினார். செயலாளர் முத்துராமலிங்கம், பொருளாளர் ராமர் முன்னிலை வகித்தனர். அனல்மின்நிலையத்தில் நடந்து முடிந்த பணிகளுக்கான தொகை 8 மாத காலமாக நிலுவையிலுள்ளது. அதை உடனே காலம் தாழ்த்தாமல் ஒப்பந்ததாரர்களுக்கு மின்சார வாரியம் வழங்க கோரியும், பிஎப், இஎஸ்ஐ., கட்டண தொகையை மாதா மாதம் வழங்க கோரியும், ஆர்ப்பாட்டத்தில் கோசங்கள் எழுப்பினர். தொகை கிடைக்காததால் கிறிஸ்துமஸ், பொங்கல் உள்ளிட்ட பண்டிகைகளை ஒப்பந்ததாரர்கள், ஒப்பந்த தொழிலாளர்கள் கொண்டாட முடியவில்லை என தெரிவித்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான அனைத்து அனல்மின்நிலைய ஒப்பந்ததாரர்கள் கலந்து கொண்டனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored AdsAnbu CommunicationsBlack Forest Cakes

Thoothukudi Business Directory