» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

மு.க.ஸ்டாலின் முதல்வரானதும் மக்களின் குறைகளை தீர்ப்பார் - கனிமொழி எம்.பி. பேச்சு

திங்கள் 13, ஜனவரி 2020 7:28:30 AM (IST)தமிழகத்தில் முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற உடன் மக்களின் அனைத்து குறைகளையும் சரிசெய்து தருவார் என்று கனிமொழி எம்.பி. பேசினார்.

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருகே உள்ள அமலிநகரில் தூத்துக்குடி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் நிதியில் இருந்து ரூ.23 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட சமுதாய நலக்கூடம் திறப்பு விழா நடைபெற்றது. அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். அமலிநகர் பங்குதந்தை ரவீந்திரன் பர்னாந்து முன்னிலை வகித்தார். விழாவில் சிறப்பு அழைப்பாளராக கனிமொழி எம்.பி. கலந்து கொண்டு, சமுதாய நலக்கூட கட்டிடத்தை ரிப்பன்வெட்டி திறந்து வைத்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-இந்த சமுதாய நலக்கூட கட்டிடம் வருவதற்கு காரணமாக இருந்தவர் அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ. தான். அவர் தான் என்னிடம் இந்த பகுதி மக்களுக்கு சமுதாய நலக்கூடம் அமைத்துக் கொடுக்க வேண்டும் என்று கூறினார். உங்கள் கோரிக்கையை ஏற்று கட்டப்பட்டுள்ளது. இதுபோல் அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ. முயற்சியில் எனது நிதியில் இருந்து பூச்சிக்காடு, மெஞ்ஞானபுரம், கிறிஸ்தியாநகரம் ஆகிய பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு கட்டிடங்கள் கட்டிக்கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த பகுதி மீனவர்கள் மீன்பிடி வலைக்கூடம் பழுதடைந்துள்ளதாக கூறி புதுப்பித்து தருமாறு கேட்டுள்ளார்கள். விரைவில் அதற்கான நடவடிக்கை எடுத்து கட்டித்தருவேன். மீனவர்களின் அனைத்து பிரச்சினைகளுக்கும் நான் நாடாளுமன்றத்தில் குரல் கொடுப்பேன். தமிழகத்தில் முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற உடன் மக்களின் அனைத்து குறைகளையும் சரிசெய்து தருவார். என்று கனிமொழி எம்.பி. பேசினார். நிகழ்ச்சியில் மாநில மாணவர் அணி துணை அமைப்பளர் உமரிசங்கர், தொண்டரணி அமைப்பாளர் சுப்பிரமணியன், திருச்செந்தூர் ஒன்றிய செயலாளர் செங்குழி ரமேஷ், அமலிநகர் ஊர்நல கமிட்டி தலைவர் எமிலிட் பர்னாந்து, உள்பட பலர் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து

ஜோசப்Jan 14, 2020 - 09:58:38 AM | Posted IP 162.1*****

இதுவரைக்கும் பிடுங்காத ஆணியை எல்லாம் அவங்க நொண்ணன் பிடுங்குவாராம். அட நம்புங்கப்பா!

உண்மைJan 13, 2020 - 05:54:17 PM | Posted IP 173.2*****

ஆமா .. சர்வாதிகாரி சுடலை கிழிப்பார்.. .. எல்லாமே கொள்ளையடித்த திருட்டு குடும்பம் ...

தமிழ்ச்செல்வன்Jan 13, 2020 - 09:32:04 AM | Posted IP 108.1*****

அப்போ, ஏற்கெனவே இருந்த உங்க அப்பா பிரச்னையை தீர்க்கலையா? எல்லா பிரச்சனைக்கும் காரணமே உங்க குடும்பம்தானே?

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Black Forest Cakes
Anbu CommunicationsThoothukudi Business Directory