» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

மகிளா காங்கிரஸ் அலுவலகத்தில் சமத்துவ பொங்கல் விழா : வசந்தகுமார் எம்பி பங்கேற்பு

ஞாயிறு 12, ஜனவரி 2020 9:41:49 PM (IST)தூத்துக்குடியில் மகிளா காங்கிரஸ் அலுவலகத்தில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. 

தமிழர் திருநாளம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தூத்துக்குடி ஜெயலானி காலனி மகிளா காங்கிரஸ் அலுவலகத்தில் சமத்துவ பொங்கல் விழா, மாவட்ட தலைவி முத்துவிஜயா தலைமையில் கொண்டாடப்பட்டது. மகிளா காங்கிரஸ் மாநிலத் துணைத் தலைவி எஸ்டிசி கன்னியம்மாள் முன்னிலை வகித்தார், மாநில செயலாளர் உமா ஒயிட்டின் வரவேற்புரை ஆற்றினார்.  கன்னியாகுமாரி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் மாநில காங்கிரஸ் கமிட்டி செயல் தலைவர் வசந்தகுமார், தூத்துக்குடி மாநகர் மாவட்ட தலைவர் சி.எஸ். முரளிதரன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர். 

விழாவில், மாநகர துணை தலைவர் ஏ.டி. பிரபாகரன், மாநகர மாவட்ட செயலாளர் எஸ். கோபால், வர்த்தக காங்கிரஸ் வட்டாரத் தலைவர் செந்தூர்பாண்டி,  வர்த்தக காங்கிரஸ் செயலாளர் ஏசுதாஸ், நிர்வாிகிகள் திருமணி முத்துக்குட்டி, வில்பிரட் சந்திரசேகர், நேரு, சண்முகசுந்தரம், ஜெயமணி சுரேஷ் இளைஞர் காங்கிரஸ், ஜெயபிரகாஷ், சாந்தி மேரி மாவட்ட தலைவி, மகராசி,காயத்ரி, சுகுணா, உமா, கற்பகவள்ளி, சண்முகத்தாய்,மாரியம்மாள், லட்சுமி, மாரிச்செல்வி, பாப்பா, ராமலட்சுமி, உட்பட பலர் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து

IndianJan 13, 2020 - 10:17:26 AM | Posted IP 108.1*****

What a great work?

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Nalam Pasumaiyagam

Black Forest Cakes

Anbu CommunicationsThoothukudi Business Directory