» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் கிறிஸ்மஸ் விழா கோலாகலம் : கேரல் பவனி - தேவாலயங்களில் சிறப்பு திருப்பலி

புதன் 25, டிசம்பர் 2019 10:20:19 AM (IST)தூத்துக்குடியில் கிறிஸ்மஸ் விழாவை முன்னிட்டு கேரல் பவனி நடைபெற்றது. தேவாலயங்களில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. 

கிறிஸ்துவர்களின் முக்கிய பண்டிகையான ஏசு பாலன் பிறந்த நாளான 25ம் தேதி உலகம் முழுவதும் கிறிஸ்துவர்களால் கிறிஸ்மஸ் விழாவாக  உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டு வருகின்றது. கிறிஸ்மஸ் விழாவை முன்னிட்டு தூத்துக்குடியில் உள்ள புகழ் பெற்ற பனிமய மாதா பேராலயத்தில் பங்குதந்தை குமாரராஜா தலைமையில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. இந்த திருப்பலியில் உலக நன்மைக்காக சிறப்பு பிராத்தனை நடத்தப்பட்டது. இதில் ஆயிரகணக்கானோர் கலந்து கொண்டனர். பின்னர் ஓருவர்க்கொருவர் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை பரிமாறி உற்சாகத்துடன் கொண்டாடினர். 

இதுபோல் தூத்துக்குடி சின்னக் கோவிலில் ஆயர் ஸ்டீபன் அந்தோணி தலைமையிலும், சகாயமாதா ஆலயத்தில் பங்குதந்தை லூர்தின் ரூபி தலைமையிலும், அந்தோணியார் ஆலயத்தில் பங்குத்தந்தை சுகிலன் தலைமையிலும், அன்னை வேளாங்கன்னி ஆலயத்தில் பங்குத்தந்தை ஜெரோசின் கட்டார் தலைமையிலும், சிஎஸ்ஐ ஆலயங்களான டூவிபுரம் ஆலயத்தில் சேகரகுரு லூர்துராஜ் ஜெயசிங் தலைமையிலும், சண்முகபுரம் தூயபேதுரு ஆலயத்தில் செல்வின்ராஜ் சார்லஸ் தலைமையிலும், மில்லர்புரம் பவுலின் ஆலயத்தில் சைமன் தர்மராஜ் தலைமையிலும், ஆசிரியர் காலனி பரி.திருத்துவ ஆலயத்தில் மைக்கேல்ராஜ் தலைமையிலும், பேட்ரிக் ஆலயத்தில் யோபுரத்தின சிங் தலைமையிலும் தலைமையிலும் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. தூத்துக்குடி மாவட்டத்தில் கோவில்பட்டி, நாசரேத், மெஞ்ஞானபுரம், ஆறுமுகநேரி, உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள தேவாலயங்களில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. முன்னதாக கிறிஸ்மஸ் விழாவை முன்னிட்டு தூத்துக்குடியில் கேரல் பவனி நடைபெற்றது. இதில் பல்வேறு வாகனங்கள் கண்ணை கவரும் வண்ண விளக்குகளால்  அலங்கரிக்கப்பட்டு அதில் ஏசு பாலன் பிறப்பை குறிக்கும் வகையில் குடில்கள் அமைக்கப்பட்டு கிறிஸ்மஸ் பாடல்களை பாடி நகரின் முக்கிய வீதிகளில் ஊர்வலமாக வந்து தங்கள் மகிழ்ச்சியை வெளிபடுத்தினர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Anbu CommunicationsThoothukudi Business Directory