» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு மது விற்பனைக்கு தடை : ஆட்சியர் அறிவிப்பு

செவ்வாய் 24, டிசம்பர் 2019 3:12:04 PM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு டாஸ்மாக் மது விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. 

இது தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி வெளியிட்ட செய்திக்குறிப்பு:  தூத்துக்குடி மாவட்டத்தில் இயங்கி வரும் அனைத்து டாஸ்மாக் சில்லறை விற்பனை மதுபான கடைகள், அதனுடன் இணைந்த மதுபான கூடங்கள் மற்றும் FL2.FL3 உரிமம் பெற்ற விடுதிகளுடன் இணைந்த மதுக்கூடங்களில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் கீழ்கண்ட நாட்களில் மூடப்பட்டு மதுபானம் விற்பனை செய்யக்கூடாது எனத்தெரிவிக்கப்டுகிறது.

ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு மதுபானம் கடத்துதல், மதுபானத்தை பதுக்கி வைத்தல் போன்ற செயல்கள் கண்டறியப்பட்டால் சம்மந்தப்பட்ட நபர்கள் மீது தமிழ்நாடு மதுவிலக்கு அமலாக்கச் சட்டத்தின் கீழ் குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது. 

மது விற்பனை தடை செய்யப்பட்ட நாட்கள்

25.12.2019(புதன்கிழமை) மாலை 05.00 மணி முதல் 27.12.2019 (வெள்ளிக்கிழமை) மாலை 05.00 மணி வரை 

28.12.2019 (சனிக்கிழமை) மாலை 05.00 மணி முதல் 30.12.2019 (திங்கள் கிழமை) மாலை 05.00 மணி வரையிலும், 

02.01.2020(வியாழன்) வாக்கு எண்ணிக்கை நடைபெறும்  நாள் 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Nalam Pasumaiyagam

Black Forest Cakes

Anbu Communications





Thoothukudi Business Directory