» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி நகர்ப்புற பகுதிகளில் 21ம் தேதி மின்தடை!!

வியாழன் 19, டிசம்பர் 2019 3:11:27 PM (IST)

தூத்துக்குடி நகர் பகுதிகளில் வருகிற 21ம் தேதி (சனிக்கிழமை) மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தூத்துக்குடி நகர மின்விநியோக செயற்பொறியாளர் விஜயசங்கர பாண்டியன் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பு: தூத்துக்குடி எட்டயபுரம் ரோட்டில் உள்ள உபமின்நிலையத்தில் வரும் 21ம் தேதி (சனிகிழமை) அன்று மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.

இதன் காரணமாக அண்ணா நகர், டூவிபுரம், போல்பேட்டை, ஆண்டாள்தெரு, சத்திரம் தெரு, 1ம்கேட், 2ம்கேட், மட்டக்கடை, பீச்ரோடு மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகள், தெப்பகுளம், சிவன் கோவில் தெரு, டபிள்யூ.ஜி.சி., ராேடு, ஜார்ஜ் ரோடு, விஇ ரோடு, ஸ்டேட் பாங்க் காலனி, முத்துகிருஷ்ணா புரம், முத்தம்மாள் காலனி, கேடிசி நகர், சிவந்தாகுளம் மெயின் ரோடு, தாமோதரன் நகர், குறிஞ்சி நகர், சிதம்பர நகர், பிரையண்ட் நகர், சுப்பையா முதலியார் புரம் ஆகிய பகுதிகளில் காலை 8 மணிமுதல் மாலை 5 மணிவரை மின்விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsNalam PasumaiyagamBlack Forest Cakes

Anbu CommunicationsThoothukudi Business Directory