» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தந்தையும் தற்கொலை முயற்சி : ஆன்லைன் ரம்மி விளையாட்டால் விபரீதம்

சனி 14, டிசம்பர் 2019 8:26:40 PM (IST)

சாத்தான்குளத்தில் ஆன்லைன் ரம்மி விளையாட்டில் நஷ்டமடைந்ததால் விரக்தியடைந்த இளைஞர் தனது குழந்தைகளுக்கு பூச்சி மருந்தை குடிக்க கொடுத்து விட்டு தானும் குடித்து தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படும் சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் பிரைட்டர்குளத்தை சேர்ந்தவர் வெற்றிவேல் (32). இவரது மனைவி சிவசக்தி (30). இத்தம்பதிகளுக்கு பிரியதர்ஷினி (4) லாவண்யா (இரண்டரை வயது) என்ற இரண்டு குழந்தைகள் உள்ளனர். வெற்றிவேல் பழைய இரும்பு வியாபாரம் செய்து வருகிறார். மேலும் ஆன்லைனிலும் ரம்மி விளையாடுவாராம். 

இந்நிலையில் சமீபகாலமாக ஆன்லைன் ரம்மி விளையாட்டிலும், தனது தொழிலிலும் வெற்றிவேலுவுக்கு நஷ்டம் ஏற்பட்டதாக தெரிகிறது. தனது மனைவியின் நகைகளை அடமானம் வைத்து ஆன்லைனில் ரம்மி விளையாடியதால் அவரது மனைவி சிவசக்தி கோபித்துக்கொண்டு செம்மண்குடியிருப்பிலுள்ள தனது தாயார் வீட்டுக்கு சென்றுவிட்டாராம். 

மனைவி பிரிந்து சென்றதால் விரக்தி அடைந்த வெற்றிவேல் சம்பவத்தன்று இரவு தனது குழந்தைகளுக்கு பூச்சி மருந்து குடிக்க கொடுத்து விட்டு தானும் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இன்று காலை வீட்டில் மூன்று பேரும் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதைப் பார்த்தவர்கள் அவர்களை உடனே மீட்டு பாளையங்கோட்டை ஹைகிரவுண்ட் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் குறித்த புகாரின் பேரில் சாத்தான்குளம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Thalir ProductsBlack Forest Cakes

Nalam PasumaiyagamThoothukudi Business Directory