» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

உள்ளாட்சிதேர்தல் புறக்கணிப்பு : கிராம மக்கள் அறிவிப்பு

சனி 14, டிசம்பர் 2019 8:09:38 PM (IST)

தூத்துக்குடியில் 150 ஆண்டுகளாக இறந்தவர்களின் உடல்களைப் புதைக்க இடுகாடு இல்லாததால் உள்ளாட்சித் தேர்தலைப் புறக்கணிப்பதாக கே.குமாரபுரம் கிராம மக்கள் அறிவித்துள்ளனர். 

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகில் உள்ள ஊத்துப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட கிராமம் கே.குமாரபுரம். இந்த கிராமத்தில் 1,200-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் 150 ஆண்டுகளுக்கு மேலாக சுடுகாடு இல்லை. அதனால், இக் கிராமத்தில் இறந்தவர்களின் உடல்களை அருகிலுள்ள வனத்துறை பகுதியில்தான் பல ஆண்டுகளாக புதைத்தும், எரியூட்டியும் வருகிறார்கள்.

ஆனால், தற்பொழுது வனத்துறையின் கெடுபிடிகள் அதிகரித்துள்ளதாகவும் இதனால் இறந்தவர்கள் உடல்களைப் புதைக்க முடியாமல் தவித்து வருகிறார்கள். இந்நிலையில், இறந்தவர் உடலைப் புதைக்கவோ, எரிக்கவோ வேண்டுமென்றால் 5,000 முதல் 10,000 ரூபாய் வரை வனத்துறை அதிகாரிகளுக்குப் பணம் கொடுக்க வேண்டியுள்ளது எனவும் குற்றம் சாட்டியுள்ளனர். அத்துடன், பலதடவை மனு கொடுத்தும் சுடுகாடு பிரச்னைக்கு இதுவரை தீர்வு கிடைக்கவில்லை என்பதால் உள்ளாட்சித் தேர்தலைப் புறக்கணிப்பதாக இக்கிராம மக்கள் அறிவித்துள்ளனர் .


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Anbu Communications

Nalam Pasumaiyagam


Black Forest Cakes


Thoothukudi Business Directory