» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

உள்ளாட்சித்துறை ஊழியர் சங்கம் ஆர்ப்பாட்டம்

சனி 14, டிசம்பர் 2019 6:43:17 PM (IST)



தூத்துக்குடியில் உள்ளாட்சித்துறை ஊழியர் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்ககளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

துப்புரவு பணியில் தனியார்மயத்தை கைவிட கோரியும், மக்கள் தொகை வளர்ச்சிக்கேற்ப, கூடுதல் ஆட்களை வேலைக்கு எடுக்க கோரியும் உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி உள்ளாட்சித்துறை ஊழியர் சங்கம் சார்பில், கோரிக்கை ஆர்ப்பாட்டம் தூத்துக்குடி மாநகராட்சி புதிய அலுவலகம் முன் நடைபெற்றது. 

ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் கருப்பசாமி தலைமை தாங்கினார். செயலாளர் ராமமூர்த்தி முன்னிலை வகித்தார். மாவட்ட பொது செயலாளர் முனியசாமி, சிஐடியூ மாவட்ட தலைவர் பேச்சிமுத்து மற்றும் நிர்வாகிகள் சங்கரன், பூலான், உள்ளிட்ட ஏராளமான மாநகராட்சி ஊழியர்கள் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Anbu Communications


Black Forest Cakes



Nalam Pasumaiyagam




Thoothukudi Business Directory