» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

சேதமான சாலையில் பல்லாங்குழி விளையாடும் போராட்டம்

சனி 14, டிசம்பர் 2019 6:32:39 PM (IST)



தூத்துக்குடியில் திருச்செந்தூர் செல்லும் அம்பேத்கர் சாலை சேதமடைந்திருப்பதை கண்டித்து சாலையில்  பல்லாங்குழி விளையாடும் போராட்டம் நடைபெற்றது.

தூத்துக்குடியில் கடந்த மாத இறுதியில் பெய்த கனமழையால் திருச்செந்தூர் செல்லும் சாலை சேதமடைந்தது. தூத்துக்குடி மாநகரின் பிரதான சாலையான திருச்செந்தூர் செல்லும் அம்பேத்கர் சாலை குண்டும் குழியுமாக சேதமடைந்திருப்பதை கண்டித்து சாலையை மாநகராட்சி நிர்வாகம் சரி செய்ய கோரி ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் பல்லாங்குழி விளையாடும் போராட்டம் நடைபெற்றது.

போராட்டத்திற்கு மாநகர குழு உறுப்பினர் ஆறுமுகம் தலைமை தாங்கினார்.  மாவட்ட செயலாளர் எம்எஸ் முத்து முன்னிலை வகித்தார். மாணவர் சங்க மாவட்ட தலைவர் ஸ்ரீநாத், மாநகர ஜனநாயக வாலிபர் சங்க செயலாளர் ஜேம்ஸ், உள்ளிட்ட பல நிர்வாகிகள் கலந்து கொண்டனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Anbu Communications


Black Forest Cakes



Nalam Pasumaiyagam



Thoothukudi Business Directory