» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

பி.எம்.சி பள்ளியில் கிறிஸ்துமஸ் - புத்தாண்டு விழா

சனி 14, டிசம்பர் 2019 5:13:32 PM (IST)தூத்துக்குடி, மில்லர்புரம் பி.எம்.சி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.

விழாவில் பள்ளியின் நிர்வாகி இ.ஜோசப் ஜான் கென்னடி, முதல்வர் பால்கனி, துணைமுதல்வர் ஜேன்மேத்யூ மற்றும் தலைமையாசிரியை அனிதா ஹாரி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர். இறைவணக்கப் பாடலைத் தொடர்ந்து விழாவின் தொடக்கமாக 10ம் வகுப்பு மாணவர் குருசந்திரன் வரவேற்புரை வழங்க மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் இணைந்து கிறிஸ்துமஸ் பாடல் பாடினர்.  

விழாவில் மழலையர்களின் குழு நடனம் பார்ப்பவர்களின் மனதைக் கவரும் விதமாக அமைந்தது.  பள்ளியின் துணை முதல்வர் ஜேன் மேத்யூ கிறிஸ்துமஸ் பற்றிய உரையை ஆற்ற இயேசு கிறிஸ்துவின் பிறப்பை மாணவர்கள் அற்புதமாக நடித்துக்காட்டினர். கிறிஸ்துமஸ் தாத்தாக்களின் வருகை மாணவர்களுக்கு குதூகலத்தையும், மகிழ்ச்சியையும் தருவதாக அமைந்தது. நிர்வாகி தலைமையுரை ஆற்ற 10ம் வகுப்பு மாணவி ஸ்ரீமதி நன்றியுரையுடன் விழா நிறைவுற்றது.  விழா ஏற்பாடுகளை பள்ளியின் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsThalir Products

Nalam PasumaiyagamBlack Forest Cakes
Thoothukudi Business Directory