» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

இந்திய கடற்படை போர்க் கப்பல் தூத்துக்குடி வருகை : மாணவ-மாணவிகள் பார்வையிட ஆர்வம்!!

சனி 14, டிசம்பர் 2019 4:59:44 PM (IST)



தூத்துக்குடி துறைமுகத்திற்கு வந்துள்ள இந்திய கடற்படை போர்க்கப்பலை பள்ளி மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் பார்வையிட்டனர்.

ஆண்டுதோறும் டிசம்பர் 4ம் தேதி கடற்படை தினம் கொண்டாடப்படுவது வழக்கம். இதையொட்டி நடைபெறும் கடற்படை வார விழாவில் இந்திய கடற்படையின் வலிமை, செயல்பாடுகள் மற்றும் சாதனைகள் உள்ளிட்டவற்றை பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் போர்க்கப்பல்களை பார்வையிடுவதற்கு பொதுமக்களும் பள்ளி மாணவ மாணவியரும் அனுமதிக்கப்படுவர். இதன் ஒரு பகுதியாக தூத்துக்குடி வஉ சிதம்பரனார் துறைமுகத்திற்கு P58 சுமேதா எனும் இந்திய கடற்படை போர் கப்பல் வந்தது. 

இந்த கப்பலை பார்வையிடுவதற்காக இன்றைய தினம் பள்ளி மாணவ-மாணவியருக்கு அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பள்ளிகளில் இருந்து பள்ளி மாணவ மாணவிகள் தங்களது ஆசிரியர்களுடன் வந்து இருந்து இந்திய கடற்படைக்கு சொந்தமான போர் கப்பலை பார்வையிட்டனர். மேலும் கப்பலில் உள்ள சாதனங்கள், போர்க்கருவிகள், தற்காப்புக் கருவிகள் உள்ளிட்டவை குறித்தும் கேட்டறிந்தனர். கடற்படையின் சாதனைகளை விளக்கும் வகையில் புகைப்பட கண்காட்சியும் வைக்கப்பட்டிருந்தது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Black Forest Cakes


Anbu Communications

Nalam Pasumaiyagam





Thoothukudi Business Directory