» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி வடக்கு மாவட்டத்தில் தி.மு.க. கூட்டணி போட்டியிடும் வார்டுகள்: கீதாஜீவன் எம்எல்ஏ அறிவிப்பு

சனி 14, டிசம்பர் 2019 10:33:34 AM (IST)

நடைபெற இருக்கும் உள்ளாட்சி மன்ற தேர்தலில் தூத்துக்குடி வடக்கு மாவட்டத்தில் தி.மு.க. கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் வார்டுகள் விபரம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக  தூத்துக்குடி வடக்கு மாவட்ட பொறுப்பாளர் பி. கீதாஜீவன் எம்.எல்.ஏ. வெளியிட்ட செய்திக்குறிப்பு : நடைபெற இருக்கும் உள்ளாட்சி மன்றத் தேர்தலில் தூத்துக்குடி வடக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட உள்ளாட்சி அமைப்புகளில் தி.மு.க. கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் மாவட்ட நிர்வாகிகளிடம் கலந்து பேசி போட்டியிடும் வார்டுகள் குறித்து ஒரு மனதாக முடிவு எடுக்கப்பட்டது.

அதன்படி காங்கிரஸ் கட்சி கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஒன்றியக்குழு உறுப்பினருக்கான வார்டு 7லும் விளாத்திகுளம் ஒன்றியத்தில் ஒன்றியக்குழு உறுப்பினருக்கான வார்டுகள் 4, 11, 12 ஆகியவற்றில் போட்டியிடுகிறது.

ம.தி.மு.க மாவட்ட ஊராட்சி  வார்டு எண்கள் 1, 3, 5-லும், கோவில்பட்டி ஒன்றியத்தில் ஒன்றியக்குழு உறுப்பினருக்கான வார்டுகள் 3, 4, 13, 16-லும் கயத்தாறு ஒன்றியத்தில் வார்டு எண்கள் 1,4,12–லும், புதூர் ஒன்றியத்தில் வார்டு எண்கள் 4, 7, 8-லும், விளாத்திகுளம் ஒன்றியத்தில் வார்டு எண் 1-லும் போட்டியிடுகிறது.

இ.கம்யூனிஸ்ட் கட்சி சார்பில்  மாவட்ட ஊராட்சி வார்டு எண் 7லும் கோவில்பட்டி ஒன்றியத்தில் ஒன்றியக்குழு உறுப்பினருக்கான வார்டு எண்கள் 8, 18-லும் போட்டியிடுகிறது.

மா.கம்யூனிஸ்ட் கட்சி கோவில்பட்டி ஒன்றியத்தில் ஒன்றியக்குழு உறுப்பினருக்கான வார்டு எண்கள் 2, மற்றும் 17 –லும், ஓட்டப்பிடாரம் ஒன்றியத்தில் வார்டு எண் 12-லும், விளாத்திகுளம் ஒன்றியத்தில் வார்டு எண் 3-லும், போட்டியிடுகிறது.

விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் கோவில்பட்டி ஒன்றியத்தில் ஒன்றியக் குழு உறுப்பினருக்கான வார்டு எண் 19-ல் தி.மு.க. சின்னமான உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறார்கள். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads


Black Forest Cakes


Anbu CommunicationsThoothukudi Business Directory