» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

அன்னம்மாள் கல்லூரியில் தேசிய அளவிலான கருத்தரங்கு

வியாழன் 12, டிசம்பர் 2019 8:14:28 PM (IST)தூத்துக்குடி அன்னம்மாள் மகளிர் கல்வியியல் கல்லூரியில் தேசிய அளவிலான கருத்தரங்கு நடைபெற்றது.

தூத்துக்குடி, அன்னம்மாள் மகளிர் கல்வியியல் கல்லூரியுடன் கல்லூரியின் பழைய மாணவியர் சங்கமும், ஈகிள் புத்தக நிறுவனமும் இணைந்து ஆசிரியர் மேம்பாட்டிற்கான நவீன கற்பித்தல் நுட்பங்கள் என்ற தலைப்பில் இன்று தேசிய அளவிலான கருத்தரங்கை நடத்தியது.

கருத்தரங்கில் கல்லூரி பொறுப்பு முதல்வர் சாருலதா வரவேற்புரையாற்றினார். விக்டோரியா சிபிஎஸ்இ பள்ளியின்; முதல்வர் சோஃபியா செல்வராணி தலைமை உரையாற்றினார். கேரள மத்திய பல்கலைக்கழகத்தின் உதவிப்பேராசிரியர் தியாகு நவீன கற்பித்தல் நுட்பங்களான வலைத்தளத்தை அடிப்படையாக கொண்ட கற்றல் கற்பித்தல் மின்னியல் கற்றல் தலைகீழ் கற்றல் மற்றும் ஒருங்கிணைந்த கற்றல் என்ற தலைப்பில் செயல்முறையுடன் சிறப்புரையாற்றினார். தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தின் இணைப் பேராசிரியர் ஸ்ரீனிவாசன் கற்பித்தலில் புதிய போக்குகளான அமைப்பு முறையிலான கற்றல் கூட்டுக் கல்வி முறை மற்றும் மூளை அடிப்படையிலான கற்றல் என்ற தலைப்பில் உரையாற்றினார்.

கருத்தரங்கில் கல்லூரிகள் மற்றும் பள்ளிகளைச் சார்ந்த பேராசிரியர்கள், ஆசிரியர்கள் மாணவ, மாணவிகள் என மொத்தம் 200 பேர் கலந்து கொண்டனர். கல்லூரியின் வரலாற்றுத் துறை உதவிப்பேராசிரியை ஜெயபார்வதி நன்றி கூறினார். இக்கருத்தரங்கிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் கல்லூரிச் செயலர் முரளிதரன், முதல்வர் .ஜாய்சிலின் சர்மிளா, மற்றும் கருத்தரங்க அமைப்பாளர்களான சாருலதா, ஜெயபார்வதி, தங்கசெல்வம் மற்றும் சண்முக செல்வ சிவசங்கரி ஆகியோர் செய்திருந்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Nalam Pasumaiyagam


Thalir Products
Black Forest Cakes
Thoothukudi Business Directory