» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

டிசம்பர் 14ம் தேதியும் வேட்புமனு தாக்கல் செய்யலாம் : தூத்துக்குடி ஆட்சியர் அறிவிப்பு

வியாழன் 12, டிசம்பர் 2019 6:57:24 PM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனு 14.12.2019ம் அன்று தாக்கல் செய்யலாம் என மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, தகவல் தெரிவித்துள்ளார்.

இது குறித்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் மற்றும் தேர்தல் அலுவலர் சந்தீப் நந்தூரி வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறியுள்ளதாவது, தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தால் தற்போது நடத்தப்பட்டு வரும், ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான சாதாரணத் தேர்தல்களுக்கான வேட்புமனு தாக்கல் 09.12.2019 முதல் ஆரம்பிக்கப்பட்டு 16.12.2019 மாலை 5 மணி வரை நடைபெறுகிறது.

தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தின் 12.12.2019 தேதிய சுற்றறிக்கையின் படி, இரண்டாவது சனிக்கிழமையான 14.12.2019 அன்று வேட்புமனுக்கள் அந்தந்த தேர்தல் நடத்தும் அலுவலர்கள் , உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களால் பெறப்படும் என்ற விவரம் பொதுமக்களுக்கும் வேட்பாளர்களுக்கும் தெரிவிக்கப்படுகிறது என தூத்துக்குடி மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsAnbu Communications

Black Forest CakesThoothukudi Business Directory