» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி மாவட்டத்தில் 2 நாட்கள் மக்கள் நீதிமன்றம் : மாவட்ட முதன்மை நீதிபதி தகவல்

வியாழன் 12, டிசம்பர் 2019 3:30:34 PM (IST)தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள நீதிமன்றங்களில் இன்றும் நாளையும் என 2 நாட்கள் மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. 

இது தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட முதன்மை நீதிபதி என்.லோகேஷ்வரன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 13 நீதிமன்றங்களில் இதுவரை 10,616 சிவில் வழக்குகள், 17,766 கிரிமினல் வழக்குகள் என மொத்தம் 28,382 வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதில் 4,466 வழக்குகள் இன்றும் நாளையும் சமரசத்திற்காக மக்கள் நீதிமன்றம் மூலம் எடுத்துக் கொள்ளப்படுகிறது. இது போல் நடப்பு ஆண்டில் மக்கள் நீதிமன்றம் மூலம் இதுவரை ரூ.2,13,49,505 மதிப்பிலான  122 வழக்குகள் சமரச தீர்வு காணப்பட்டுள்ளது. 

இருதரப்பினருக்கும் மகிழ்ச்சி ஏற்படுத்தும் வகையில் மக்கள் நீதிமன்றம் விரைவாக தீர்ப்பு வழங்குகிறது. நிலுவை வழக்குகளும் தீர்வாகிறது. நீதிமன்ற கட்டணம் திருப்பித் தரப்படுகிறது. வங்கிகளின் வராக் கடன்கள் வரவு, பொதுமக்களுக்கு வட்டிக் கொடுமையிலிருந்து தீர்வு கிடைக்கிறது. மாவட்டத்தில் உள்ள 13 நீதிமன்றங்களில் இன்றும் நாளையும் மக்கள் நீதிமன்றம் நடக்கிறது எனவே, பொதுமக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று தெரிவித்தார். பேட்டியின் போது நீதித்துறை நடுவர் எஸ்.ஹேமா, சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர், சார்பு நீதிபதி பெஞ்சமின் ஆகியோர் உடனிருந்தனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Black Forest Cakes

Nalam Pasumaiyagam
Anbu CommunicationsThoothukudi Business Directory