» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

படகு பழுதாகி நடுக்கடலில் தத்தளித்த 3 மீனவர்கள் மீட்பு

வியாழன் 12, டிசம்பர் 2019 11:40:04 AM (IST)

படகு இன்ஜின் பழுதாகி நடுக்கடலில் தத்தளித்த தூத்துக்குடியைச் சேர்ந்த 3 மீனவர்களை விசைப் படகு மீனவரக்ள் பத்திரமாக மீட்டனர்.

தூத்துக்குடி திரேஸ்புரம் அண்ணா காலனியைச் சேர்ந்தவர் வாசகம். இவரது மகன்கள் மதன் (24), ஆனந்த் (22), அசோக் (20), மீனவர்களான இவர்கள் மூவரும் நேற்று அதிகாலை 2மணியளவில் பைபர் படகில் மீன்பிடிக்கச் சென்றுள்ளனர். வழக்கமாக காலை 8 மணிக்கு கரை திரும்ப வேண்டிய அவர்கள் கரைதிரும்வில்லை. இதுகுறித்து கடலோர காவல்படைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் கடற்கரையில் இருந்து சுமார் 5 நாட்டிகல் மைல் தொலைவில் படகின் இஞ்ஜின் பழுதாகி தவித்துள்ளனர். இதனைப் பார்த்த அவ்வழியே சென்ற விசைப்படகு மீனவர்கள் அவர்கள் மூவரையும் மீட்டு கரைக்கு அழைத்து வந்தனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Black Forest Cakes


Nalam PasumaiyagamAnbu CommunicationsThoothukudi Business Directory