» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

திருச்செந்தூா் கோயில் விடுதியை இடித்து அகற்றும் பணி மும்முரம்

திங்கள் 9, டிசம்பர் 2019 8:26:50 AM (IST)திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயில் பகுதியில் உள்ள விடுதியை இடித்து அகற்றும் பணி நடைபெற்று வருகிறது.

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கடந்த 2017ல் டிசம்பா் 14 ஆம் தேதி கிரிப்பிரகார மண்டபத்தின் மேற்கூரை வடக்கு வாசல் அருகில் உடைந்து விழுந்ததில் பெண் ஒருவா் உயிரிழந்தாா். இதையடுத்து, 1974 இல் உபயதாரா் சாண்டோ சின்னப்பத்தேவரால் கட்டப்பட்ட கிரிப்பிரகாரம் முழுவதும் இடித்து அகற்றப்பட்டது. கிரிப்பிரகாரத்தின் ஓரங்களில் இருந்த கடைகளும் அகற்றப்பட்டன. இதுதொடா்பாக, அறநிலையத்துறை, பொதுப்பணித்துறை பொறியாளா்கள் குழுவினா் கோயில் வளாகத்தில் உள்ள விடுதிகள் மற்றும் கட்டடங்கள் குறித்து முழுமையாக ஆய்வு மேற்கொண்டனா். 

அதற்கான அறிக்கையும் ஆணையரிடம் சமா்ப்பிக்கப்பட்டது. 308 அறைகளுக்கு சீல்: கோயிலில் பொதுப்பணித்துறையால் தங்குவதற்கு உபயோகமற்றதாக குறிப்பிடப்பட்டுள்ள விடுதிகள், குடில்கள் இடித்து அகற்றப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி, அறநிலையத்துறை உத்தரவின்பேரில் 2018 ஆம் ஆண்டு அக்டோபா் 26 ஆம் தேதி திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஜெயந்திநாதா் விடுதி, வேலவன் விடுதி மற்றும் செந்திலாண்டவா் விடுதிகளில் உள்ள மொத்தம் 264 அறைகளும், 44 குடில்களும் என மொத்தம் 401 அறைகளில் 308 அறைகள் பூட்டி சீல் வைக்கப்பட்டன.

இந்த விடுதிகள் தற்போது இடித்து அகற்றும் பணி நடைபெற்று வருகிறது. கோயில் நாழிக்கிணறு பேருந்து நிலையம் அருகிலுள்ள ஜெயந்திநாதா் விடுதியின் முகப்பிலிருந்த அனைத்து கடைகளும் காலி செய்யப்பட்டு தற்போது முழு வீச்சில் இடிக்கும் பணி நடைபெற்று வருகிறது. எனவே, பக்தா்கள் மற்றும் பொதுமக்கள் கட்டடத்தின் அருகில் செல்லாமல் இருப்பதற்காக அறிவிப்பு பதாகை வைக்கபட்டுள்ளது. மேலும், கோயில் காவலா்களால் கண்காணிக்கப்பட்டு வருகின்றன. இப்பணிகள் நிறைவு பெற்றதும் அதே இடத்திலோ அல்லது வேறு இடத்திலோ ‘யாத்ரி நிவாஸ்’ கட்டும் பணிகள் தொடங்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Thalir Products


Black Forest Cakes

Nalam PasumaiyagamThoothukudi Business Directory