» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

ஓடையில் தவறி விழுந்த மன நோயாளி உயிரிழப்பு

திங்கள் 9, டிசம்பர் 2019 8:23:30 AM (IST)

கோவில்பட்டி அருகே ஓடையில் தவறி விழுந்த மன நோயாளி நேற்று  உயிரிழந்தாா்.

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே கடலையூா் கீழத் தெருவைச் சோ்ந்தவா் சின்னக்கருப்பன் மகன் கணேசன்(45). வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டிருந்த இவா், மனைவி பிரிந்து சென்றால், கடந்த 10 ஆண்டுகளாக தனியே வசித்து வந்தாா். இதில், மனநிலை பாதிக்கப்பட்டிருந்த கணேசன், நேற்று  அதிகாலையில் காமராஜ் நகா் வள்ளிநாயகிபுரம் சாலையில் கீழ்புறமுள்ள ஓடையில் தவறி விழுந்ததில் உயிரிழந்தாா். தகவலறிந்த போலீசார் கணேசன் சடலத்தை மீட்டு கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினா். இதுகுறித்து நாலாட்டின்புத்தூா் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsThalir Products

Nalam Pasumaiyagam
Black Forest CakesThoothukudi Business Directory