» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

உள்ளாட்சி தேர்தலை சந்திக்க திமுகவினர் தயாராக இல்லை: அமைச்சர் கடம்பூர் ராஜூ பேட்டி

திங்கள் 9, டிசம்பர் 2019 8:14:25 AM (IST)

உள்ளாட்சி தேர்தலை தி.மு.க.வினர் சந்திக்க தயாராக இல்லை என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

கோவில்பட்டியில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது; உள்ளாட்சி தேர்தலுக்காக அ.தி.மு.க. தான் முதன்முதலில் போட்டியிட விரும்புபவர்களிடம் மனுக்களை பெற்றது. மேலும் கூட்டணிக்கான இடங்கள் குறித்து தற்போது பேசப்பட்டு வருகிறது. இது எதுவுமே தி.மு.க. உள்ளிட்ட எதிர்கட்சிகள் செய்யவில்லை. இதன்மூலம் அவர்கள் தேர்தலை சந்திக்க தயார் இல்லை என தெரிகிறது.

மேலும், பிரிக்கப்பட்ட மாவட்டங்களை சேர்த்து, 9 மாவட்டங்களைத் தவிர மற்ற மாவட்டங்களுக்கு தேர்தல் நடத்த தயார் என தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையம் தெரிவித்த கருத்தை உச்சநீதிமன்றம் ஏற்றுக்கொண்டுள்ளது. ஆனால் அதன் பின்னரும் தேர்தலை சந்திக்க பயந்து கொண்டு மீண்டும் நாங்கள் நீதிமன்றத்தை நாடுவோம் என்று சொல்கிறார்கள். நாங்கள் தேர்தலை சந்திப்போம். முழுமையாக வெற்றி பெறுவோம். முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு பின்னர் அ.தி.மு.க.வை வழி நடத்துவதற்கு தகுதியானவர்களாக முதல்-அமைச்சரும், துணை முதல்-அமைச்சரும் உள்ளனர். எனவே வெற்றிடம் என்பது இல்லை. பொதுச் செயலாளர் ஜெயலலிதா மட்டும்தான் என்பதால் அந்த பதவி என்றைக்கு நிரப்பப்படாது. இவ்வாறு அவர் கூறினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Nalam Pasumaiyagam


Black Forest Cakes


Thalir ProductsThoothukudi Business Directory