» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

புறவழிச்சாலையில் 4 கார்கள் அடுத்தடுத்து மோதல் : டிரைவர் காயம்

திங்கள் 9, டிசம்பர் 2019 8:10:27 AM (IST)

நாலாட்டின்புத்தூர் அருகே புறவழிச்சாலையில் 4 கார்கள் அடுத்தடுத்து மோதி விபத்துக்கு உள்ளானதில் டிரைவர் காயம் அடைந்தார்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நாலாட்டின்புத்தூர் அருகே உள்ள புறவழிச்சாலையில் திருச்செந்தூரில் இருந்து புறப்பட்ட ஒரு கார் கடலூரை நோக்கி நேற்று மதியம் சென்று கொண்டு இருந்தது. அப்போது அந்த வழியாக ஒரு நாய் திடீரென சாலையை கடந்ததாக கூறப்படுகிறது. இதனால் கார் டிரைவர் காரை உடனடியாக நிறுத்தினார். திடீரென கார் சாலையில் நின்றதால் அதன் பின்னால் வந்த 3 கார்கள் ஒன்றன்பின் ஒன்றாக மோதி நின்றன. இதில் திருச்செந்தூரில் இருந்து புறப்பட்டு வந்த காரின் டிரைவர் கதிரேசன் மட்டும் லேசான காயம் அடைந்தார். 

மற்றவர்கள் அதிர்ஷ்டவசமாக காயமின்றி தப்பினர். இதை தொடர்ந்து அந்த பகுதியில் போக்குவரத்து தடை ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த நாலாட்டின்புத்தூர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விபத்தில் சிக்கிய கார்களை அங்கிருந்து அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரிசெய்தனர். காயம் அடைந்த கதிரேசன் அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று ஊர் திரும்பினார். இந்த சம்பவம் குறித்து நாலாட்டின்புத்தூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.`


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Black Forest CakesAnbu CommunicationsThoothukudi Business Directory