» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் இளம்பெண் உட்பட 4 பேர் தற்கொலை

ஞாயிறு 8, டிசம்பர் 2019 12:22:41 PM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் வெவ்வேறு சம்பவங்களில் இளம்பெண் உட்பட 4 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.

தூத்துக்குடி நந்தகோபாலபுரத்தை சேர்ந்தவர் ஸ்டீபன் என்பவரது மகள் ஜெமீனா லிசி (20). இவர் கடந்த சில வருடங்களாவே உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்தாராம். இதனால் வேதனை அடைந்த அவர் சம்பவத்தன்று வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்த புகாரின் பேரில் வடபாகம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தூத்துக்குடி மாவட்டம் மணியாச்சி அருகே கொம்பாடி கிராமத்தை சேர்ந்த பொன்னுச்சாமி (61). விவசாயி. இவர் உளுந்து பயிரிட்டிருந்தாராம். சமீபத்தில் பெய்த மழையில் இவரது பயிர்கள் அழுகி விட்டாால் வேதனை அடைந்த அவர் சம்பவத்தன்று விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்த புகாரின் பேரில் மணியாச்சி போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தூத்துக்குடி பிஎன்டி காலனியை சேர்ந்தவர் அருணாசலம் என்பவரது மகன் சீனிவாசன் (50). இவர் உப்பு வியாபாரம் செய்து வந்தார். வியாபாரத்தில் இவருக்கு அதிக நஷ்டம் ஏற்பட்டு கடன் ஆனதாக கூறப்படுகிறது. கடன் கொடுத்தவர்கள் திருப்பி கேட்கவே விரக்தியடைந்த அவர் அளவுக்கு அதிகமாக மாத்திரை தின்று தற்கொலை செய்து கொண்டார். இது குறித்த புகாரின் பேரில் சிப்காட் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருவாரூர் மாவட்டம் ஆதி திராவிடர் தெருவை சேர்ந்தவர் காத்தமுத்து (40). இவரது மனைவி இருளம்மாள் (38). கணவன் மனைவி இடையே வீடு விற்பனை செய்வதில் தகராறு இருந்து வந்ததாம். இதனால் கணவருடன் ஏற்பட்ட தகராறில் இருளம்மாள் மாசார்பட்டி அருகேயுள்ள தனது தாயார் வீட்டிற்கு வந்தாராம். தொடர்ந்து காத்தமுத்து மனைவியை தேடி வந்துள்ளார். அங்கும் தகராறு ஏற்படவே காத்தமுத்து தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்த புகாரின் பேரில் சங்கரலிங்கபுரம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsNalam Pasumaiyagam
Black Forest Cakes

Thalir ProductsThoothukudi Business Directory