» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

நதிக்கரை ஊற்று கவிதை நூல் வெளியிட்டு விழா

திங்கள் 2, டிசம்பர் 2019 9:05:31 PM (IST)செய்துங்கநல்லூரில்  கவிஞர் ஆழிகுடி துரைப்பாண்டியன் எழுதிய நதிக்கரை ஊற்று என்னும் கவிதை நூல் வெளியிட்டு  விழா நடந்தது.

தூத்துக்குடி மாவட்டம், செய்துங்கநல்லூரில் கவிஞர் ஆழிகுடி துரைப்பாண்டியன் எழுதிய நதிக்கரை ஊற்று என்னும் கவிதை நூல் வெளியிட்டு  விழா நடந்தது. தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்க முன்னாள் மாவட்ட துணை தலைவர் ஜெயசீலன் தலைமை வகித்து நூலை வெளியிட்டார்.  அரசுபோக்குவரத்து கழக ஓய்வு பெற்ற ஓட்டுனர் செல்வ அந்தோணி நூலை பெற்றுக் கொண்டார். ஸ்ரீவைகுண்டம்  வட்ட அரசு ஊழியர் சங்க  பொருளாளர் முத்துசாமி முன்னிலை வகித்தார்.   பொன்சொர்ணா பதிப்பக உரிமையாளர் அபிஷ்விக்னேஷ் வரவேற்றார். முறப்பநாடு சுப்பிரமணியன் தொகுத்து வழங்கினார். 

கொங்கராயகுறிச்சி அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் பார்வதி, ,ஊரக வளர்ச்சி துணை மாவட்ட தலைவர் மகேந்திரபிரபு, துணை வட்டார வளர்ச்சி அலுவலர்  சுரேஷ், ஸ்ரீவைகுண்டம்  வட்ட அரசு ஊழியர் சங்க செயலாளர் சீனிவாசன், நல்லாசிரியர் அகஸ்தீஸ்வரன், மணக்கரை போஸ்ட் மாஸ்டர் காளிமுத்து,  சத்துணவு ஊழியர் சங்கத்தினை சேர்ந்த காசிமணி, வேல் முருகன், உமா, பண்டாரம், அன்னமரியாள், தஸ்நேவிஸ் உள்பட பலர்கலந்துகொண்டனர்.  நூலாசிரியர் கவிஞர் ஆழிகுடி துரைப்பாண்டி ஏற்புரையாற்றினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Black Forest Cakes

Friends Track CALL TAXI & CAB (P) LTD


Anbu CommunicationsThoothukudi Business Directory