» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

அவசர உதவிக்கு காவல்துறை எண்கள் அறிவிப்பு!

திங்கள் 2, டிசம்பர் 2019 6:59:53 PM (IST)தூத்துக்குடி மாவட்ட எஸ்பி., அருண் பாலகோபாலன், உத்தரவுப்படி பேரிடர் கால மீட்புப்பணிகள் காவல்துறை சார்பாக துரிதமாக நடைபெற்று வருகிறது.

தூத்துக்குடி மாவட்டத்தில் மாவட்ட எஸ்பி., அருண் பாலகோபாலன், உத்தரவுப்படி அந்தந்த, காவல் உட்கோட்ட காவல்துணை கண்காணிப்பாளர்கள் தலைமையில் பேரிடர் கால மீட்புப்பணிகள் குறித்து சிறப்பு பயிற்சி பெற்ற 8 காவல்துறை வீரர்கள் அடங்கிய குழுவினர் நேற்று (01.12.2019) மற்றும் இன்றும் மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். காவல்துறையின் மாநில பேரிடர் மீட்புப் படையினர் தூத்துக்குடி, ஆழ்வார்திருநகரி, சாத்தான்குளம் மற்றும் ஸ்ரீவைகுண்டம் ஆகிய இடங்களில் முகாமிட்டு ஆங்காங்கே மழைவெள்ளத்தால் பாதித்த பகுதிகளில் மீட்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். 

இப்படையில் உள்ள அனைவரும் மீட்புப்பணிகள் மேற்கொள்வது குறித்து சிறப்ப பயிற்சி பெற்றுள்ளனர். இவர்களிடம் மீட்புப்பணிகள் மேற்கொள்வதற்கு ஏதுவாக மடிக்கக்கூடிய படுக்கை, மண்வெட்டி, மரம் அறுக்கும் இயந்திரம், கோடாரி, முதலுதவி மருத்துவ உபகரணங்கள், நைலான் கயிறு, நீண்ட கத்தி, கடப்பாறை போன்ற அனைத்துவிதமான உபகரணங்களும் வைத்துள்ளனர். ஒவ்வொரு குழுவிலும் ஒரு சார்பு ஆய்வாளர் தலைமையில் 10 வீரர்கள் உள்ளனர்.
 
மழை வெள்ளத்தால் பாதிப்படைந்த சாலைகளை சீரமைத்தல், மழை வெள்ளம் பாதிக்காமல் இருப்பதற்கு மணல் மூட்டைகள் அடுக்குதல், சாலையில் மழையால் சரிந்த பெரிய மரங்களை வெட்டி அகற்றுதல், பாதிக்கப்பட்டவர்களை காப்பாற்றுதல், ஆற்றில் குளிக்கக்கூடாது என மழைவெள்ளம் குறித்த எச்சரிக்கைகளை ஒலிபெருக்கி மூலம் பொது மக்களுக்கு விழிப்புணர்வு கொடுத்து, தூத்துக்குடி மாவட்ட காவல் துறையினர் மேற்கொண்டு வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டத்தில் புதுக்கோட்டை காவல் நிலைய சரக எல்லைக்குட்பட்ட மறவன்மடம், முத்தையாபுரம் காவல் நிலையத்திற்குட்பட்ட அத்திமரப்பட்டி, வீரநாயக்கன்தட்டு, ஆத்தூர் காவல் நிலையத்திற்குட்பட்ட முக்காணி, ஆத்தூர், ஏரல் காவல் நிலையத்திற்குட்பட்ட சிவராமமங்கலம் உட்பட 36 கிராமங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்படும் பகுதிகள் என அடையாளம் காணப்பட்டு, அந்தப்பகுதிகளுக்கு காவல்துறை அதிகாரிகள் ரோந்து சென்று கண்காணித்து வருகின்றனர். 

மழைவெள்ளத்தால் பாதிப்படைந்த மக்கள் தங்குவதற்கு அந்தந்த பகுதிகளில் பொதுமக்களை தங்க வைப்பதற்கு பள்ளிக்கூடம் மற்றும்; திருமண மண்டபம் போன்ற இடங்கள் தயார் நிலையில் வைத்துள்ளனர். மேலும் அனைத்து பகுதிகளுக்கும் அதிகப்படியான காவலர்கள் ரோந்து அனுப்பப்பட்டு, தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் தீவிரமாக கண்காணித்து மீட்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். பொதுமக்கள் மழைவெள்ளத்தால் பாதிக்கப்பட்டாலோ அல்லது அவரச உதவிகள் தேவைப்பட்டாலோ காவல்துறையின் செல்போன் எண் 95141 44100 அல்லது அவசர தொலைபேசி எண் 100ஐ தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று எஸ்பி., தெரிவித்தார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

சேகர தலைவரை தாக்கிய முன்னாள் ஊழியர் கைது

புதன் 30, செப்டம்பர் 2020 11:02:19 AM (IST)

Sponsored Ads

Black Forest Cakes

Anbu Communications
Thoothukudi Business Directory