» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

வெள்ள நீர் வடிந்து செல்ல தற்காலிக ஒடை அமைக்கும் பணிகள்: ஆட்சியர் தகவல்

திங்கள் 2, டிசம்பர் 2019 5:49:45 PM (IST)

தூத்துக்குடி மாநகராட்சியில் வெள்ள நீர் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வெள்ள நீர் வடிந்து செல்ல ஜே.சி.பி மூலம் தற்காலிக ஒடை அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.  மேலும் 47 இடங்களில் மோட்டார் வைத்து நீரை அப்புறப்படுத்தும் பணிகளும் நடைபெற்று வருகிறது என ஆட்சியர் தெரிவித்தார்.

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வடகிழக்கு பருவமழை பாதிப்புகள் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பான ஆய்வுக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, பேசியதாவது: தூத்துக்குடி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை சராசரி அளவு 429 மி.மீ. ஆகும். இதுவரை 547 மி.மீட்டர் அளவுக்கு பெய்துள்ளது. இது இயல்புநிலைய விட 30 சதவீதம் அதிகமாகும். வடகிழக்கு பருவமழையினால் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 240 குளங்கள் 100 சதவீதம் நிரம்பியுள்ளது. 118 குளங்கள் 50 சதவீதம் நிரம்பியுள்ளது. 50க்கும் குறைவான குளங்களே 25 சதவீதம் நிரம்பியுள்ளது. சராசரியாக 90 சதவீதம் குளங்கள் நிரம்பியுள்ளது. 

தூத்துக்குடி மாவட்டத்தில் 29.11.2019 வெள்ளிக்கிழமை அன்று சாத்தான்குளம் பகுதியில் 18 செ.மீ மழையளவும், தூத்துக்குடியில் 16 செ.மீ மழையளவும் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் சராசரியாக 6 செ.மீ மழை பெய்துள்ளதால் சாத்தான்குளம், திருச்செந்தூர் மற்றும் தூத்துக்குடி மாநகராட்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழை வெள்ள நீர் தெருக்கள் மற்றும் வீடுகளில் தேங்கியுள்ளது. இதில் சாத்தான்குளம் பகுதியில மழை நீர் முற்றிலும் வடிந்துள்ளது. திருச்செந்தூர் கால்வாய் ஒடைகள் அனைத்தும் அதிக நீர் செல்லும் வகையில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தூத்துக்குடி மாநகராட்சியில் வெள்ள நீர் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வெள்ள நீர் வடிந்து செல்ல ஜே.சி.பி மூலம் தற்காலிக ஒடை அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

மேலும் 47 இடங்களில் மோட்டார் வைத்து நீரை அப்புறப்படுத்தும் பணிகளும் நடைபெற்று வருகிறது. சாத்தான்குளத்தில் 3 தற்காலிக முகாம்களில் 150க்கும் மேற்பட்ட பொது மக்கள் தங்கவைக்கப்பட்டிருந்தனர். வெள்ள நீர் வடிந்துள்ளதால் வீட்டிற்கு சென்றுள்ளனர். தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் 1 முகாமில் பொது மக்கள் மதிய உணவு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. பொது மக்களில் தங்கள் இல்லங்களில்உள்ளனர். மேலும், கனமழை மேலும் சில தினங்களுக்கு பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. மேலும் வெள்ள பாதிப்பு ஏற்படின் பொது மக்களுக்கு தேவையான தற்காலிக முகாம்கள் தயார் நிலையில் உள்ளது. மேலும், எவ்வித பாதிப்பு ஏற்பட்டாலும் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள அனைத்து துறைகளும் தயார் நிலையில் உள்ளது என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.


மக்கள் கருத்து

tamilanDec 3, 2019 - 07:32:59 PM | Posted IP 108.1*****

மாவட்ட ஆட்சியர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் அவர்களின் பணி மேலும் தொடர வேண்டும் .

ஒருவன்Dec 3, 2019 - 12:19:42 PM | Posted IP 108.1*****

இனி சில ஒவ்வொரு தெருவிலும் கிணறுகள் தோண்ட வேண்டும் , மழைநீர் பாதாள சாக்கடை வழியாக கடலுக்கு செல்லாமல் , கிணறு வழியாக சேமிக்க ஏற்பாடு செய்யுங்கள் ...

ஆப்Dec 3, 2019 - 11:31:53 AM | Posted IP 162.1*****

indha varudam oru edathil thanneer thengiduchuna adutha varudam adhe idathil neer thengamal paarthu kolvadhu nalla arasaangathin seyalpaadu.tharkaliga odai ...........sirippudhaan varudhu.makkal paavam.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Black Forest Cakes


Anbu CommunicationsThoothukudi Business Directory