» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

குடியிருப்பு பகுதிகளில் மழைநீர்: பொதுமக்கள் மறியல்

திங்கள் 2, டிசம்பர் 2019 4:30:35 PM (IST)தூத்துக்குடியில் குடியிருப்பு பகுதிகளில் தேங்கியுள்ள மழைநீர் வெள்ளத்தை அப்புறப்படுத்தக் கோரி பல்வேறு பகுதிகளில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். 

தூத்துக்குடியில் கடந்த 2 நாட்களுக்கு முன் பெய்த கனமழையால் பல்வேறு பகுதிகளில் மழைநீர் வெள்ளம் புகுந்துள்ளது. கழிவு நீரோடு மழைநீரும் கலந்து வீடுகளுக்குள் புகுந்துள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தூத்துக்குடி 3வது மைல் திருவிக நகரைச் சேர்ந்த பொதுமக்கள் தூத்துக்குடி - திருநெல்வேலி பிரதான சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து தென்பாகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணகுமார் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி.

மழைநீரை அப்புறப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்தனர். இதையடுத்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டனர். மறியல் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுபோல் பாத்திமா நகர், கீதாஜீவன் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த ஜார்ஜ் ரோட்டில்  சுமங்கலி மண்டபம அருகில் மறியலில் ஈடுபட்டனர். அவர்களிடம் மாநகராட்சி மற்றும் காவல்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து சிறிது நேரத்தில் போராட்டம் கைவிடப்பட்டது.  இதுபோல் அம்பேத்கர் நகர் பகுதி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Friends Track CALL TAXI & CAB (P) LTDBlack Forest Cakes

Anbu CommunicationsThoothukudi Business Directory