» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

வெள்ளத்தில் மிதக்கும் தூத்துக்குடி: கனிமொழி எம்பி ஆய்வு

திங்கள் 2, டிசம்பர் 2019 4:16:36 PM (IST)தூத்துக்குடியில் பெரும்பாலான பகுதிகளில் மழைநீர் வெள்ளத்தில் மிதக்கிறது. மழைநீர் தேங்கிய பகுதிகளை கனிமொழி எம்பி இன்று 2வது நாளாக பார்வையிட்டார். 

தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கவிஞர் கனிமொழி கருணாநிதி தூத்துக்குடி மாநகர 55, 56 வார்டுகள்,  ஸ்பிக் நகர், தங்க பாரதிநகர், மற்றும் சவேரியார் புரத்தில் ரோடுகளில் குளம்போல் தேங்கியுள்ள மழைநீரை பொதுமக்களுடன் சென்று பார்வையிட்டார். இதேபோல் இந்திரா நகர் பகுதி, ஸ்டேட் பேங் காலனி, முத்தம்மாள் காலனி, தனசேகரன் நகரில் வீடுகளில் தேங்கியுள்ள மழைநீரை பார்வையிட்டு மாநகராட்சி ஆணையரிடம் பேசி உடனடி நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.  

ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா,மாவட்ட விவசாய தொழிலாளர் அணி துணை அமைப்பாளர் சுயம்பு, ஸ்பிக் நகர் பகுதி செயலாளர் பொன்னரசு, ஸ்பிக் நகர் பகுதி இளைஞரணி அமைப்பாளர் அருண்குமார், இளைஞர் அணி துணை அமைப்பாளர் சக்தி, மாவட்ட மகளிர் அணி துணை அமைப்பாளர் கல்பனா, திமுக நிர்வாகிகள் சுப்பிரமணியன், மணிவண்ணன், ரவீந்திரன், துரைசிங்கம், வெயில் ராஜ், கூட்டுடன் காடு ஹரி பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் உடன் சென்றனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Black Forest Cakes

Anbu Communications

Thoothukudi Business Directory