» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

போர்க்கால அடிப்படையில் மழைநீரை அகற்ற வேண்டும் : தூத்துக்குடி ஆட்சியரிடம் அமமுக மனு

திங்கள் 2, டிசம்பர் 2019 1:00:10 PM (IST)தூத்துக்குடி மாநகர பகுதிகளில் தேங்கியுள்ள மழைநீரை போர்க்கால முறையில் செயல்பட்டு அகற்ற வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் அமமுக கட்சி சார்பில் மனு அளிக்கப்பட்டது.

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. ஆட்சியர் சந்திப்நந்தூரி கலந்து கொண்டு பொது மக்களிடம் மனுக்களை பெற்றார். இதில் தூத்துக்குடி மாவட்ட அமமுக செயலாளர் புவனேஷ்வரன் மாவட்டஆட்சியர் சந்திப்நந்தூரிக்கு அளித்த மனுவில், தூத்துக்குடி மாவட்டத்தில் பெய்த கனமழையால் மாவட்டம் முழுவதும் வெள்ளபெருக்கு ஏற்பட்டதால் போக்குவரத்து பாதிக்கப் பட்டுள்ளது. 

குறிப்பாக தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட 60 வார்டுகளிலுள்ள தெருக்களில் பல அடி உயரத்திற்கு தண்ணீர் தேங்கியுள்ளது.சுமார் 5 ஆயிரத்திற்கு மேற்பட்ட குடும்பங்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து முடங்கியுள்ளனர். அவர்களை படகுகள் மூலம் மீட்டு திருமண மண்டபங்களில் தங்க வைத்து நிவாரண உதவி வழங்க வேண்டும். 

தேங்கியுள்ள மழைநீரை உடனே அகற்ற ராட்சத மோட்டார்களை பயன்படுத்த வேண்டும். தொற்றுநோய்கள் பரவுவதை தடுக்க மருந்துகள் தெளிக்க வேண்டும். மழைநீர் சூழ்ந்துள்ள பகுதிகளில் வீடு வீடாக டாக்டர்கள் கொண்டு பரிசோதனை செய்ய வேண்டும். இவை அனைத்தையும் போர்க்கால அடிப்படையில்  நிறைவேற்ற வேண்டுமென மனுவில் கூறப்பட்டிருந்தது.மனு அளிக்கையில் அவருடன், முன்னாள் மேயர் அந்தோணிகிரேசி, வட்ட செயலாளர் காசிலிங்கம், உள்ளிட்ட பல அமமுகவினர் சென்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Black Forest Cakes

Anbu Communications
Friends Track CALL TAXI & CAB (P) LTD

Thoothukudi Business Directory