» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

மனைவியின் தங்கையை 2வது திருமணம் செய்ய எதிர்ப்பு: வாலிபர் தூக்கிட்டு தற்கொலை!

திங்கள் 2, டிசம்பர் 2019 12:47:39 PM (IST)

சாத்தான்குளம் அருகே மனைவியின் தங்கையை திருமணம் செய்ய எதிர்ப்பு கிளம்பியதால் வாலிபர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். 

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகேயுள்ள பெருமாள்குளம் கிராமம், தெற்கு தெருவைச் சேர்ந்தவர்  முருகேசன் மகன் லிங்கராஜா (24), வாழைக்காய் வியாபாரம் செய்து வந்தார். இவர் உமா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியருக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், உமாவின் தங்கையுடன் நெருங்கி பழகி வந்துள்ளார். மேலும், அவரை 2வது திருமணம் செய்ய திட்டமிட்டுள்ளார். இதற்கு அவரது குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்து கண்டித்துள்ளனர். இதனால் விரக்தியடைந்த லிங்கராஜா அங்குள்ள தோட்டத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து சாத்தான்குளம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Anbu Communications




Friends Track CALL TAXI & CAB (P) LTD

Black Forest Cakes




Thoothukudi Business Directory