» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடி அருகே கணவன்- மனைவி தற்கொலை: போலீஸ் விசாரணை
திங்கள் 2, டிசம்பர் 2019 10:52:11 AM (IST)
தூத்துக்குடி அருகே குடும்பத் தகராறில் கணவன் - மனைவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இது தொடர்பாக போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது : தூத்துக்குடி அருகேயுள்ள கூட்டாம்புளி காரனேஷ் தெருவைச் சேர்ந்தவர் செல்வராஜ் மகன் முத்துகுமார் (37). இவரது மனைவி காந்தி (34), இந்த தம்பதியருக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் கணவன் - மனைவி இடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதில் காந்தி 2 முறை விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். அவரை உறவினர்கள் மீட்டு மருத்துவமனையில் சேர்த்து காப்பாற்றியுள்ளனர். இந்நிலையில் நேற்று இரவு அவர்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது.
இதில் மன வேதனையடைந்த காந்தி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதையறிந்த அவரது கணவர் முத்துகுமார் மனைவியின் சேலையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து இன்று காலை அக்கம் பக்கத்தினர் புதுக்கோட்டை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். இன்ஸ்பெக்டர் முத்துபாண்டி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இருவரது உடல்களையும் மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். குடும்பத் தகராறில் கணவன் - மனைவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

திமுக, அமமுக நிர்வாகிகள் அதிமுகவில் ஐக்கியம்
ஞாயிறு 8, டிசம்பர் 2019 6:18:38 PM (IST)

தூத்துக்குடியில் மீண்டும் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்
ஞாயிறு 8, டிசம்பர் 2019 5:15:55 PM (IST)

தூத்துக்குடியில் இளம்பெண் உட்பட 4 பேர் தற்கொலை
ஞாயிறு 8, டிசம்பர் 2019 12:22:41 PM (IST)

திருமணமான இளம்பெண் வடமாநில வாலிபருடன் மாயம்
ஞாயிறு 8, டிசம்பர் 2019 12:09:35 PM (IST)

கழிவுநீரில் தவறி விழுந்த டிரைவர் பரிதாப சாவு
ஞாயிறு 8, டிசம்பர் 2019 12:03:08 PM (IST)

தூத்துக்குடியில் கஞ்சா விற்பனை : 5 வாலிபர்கள் கைது
ஞாயிறு 8, டிசம்பர் 2019 11:58:07 AM (IST)

ChinnaduraiDec 2, 2019 - 12:19:21 PM | Posted IP 162.1*****