» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

பாதாள சாக்கடை திட்டத்தை நிறைவேற்றாததால் பாதிப்பு : கனிமொழி எம்.பி கருத்து

திங்கள் 2, டிசம்பர் 2019 10:26:57 AM (IST)தூத்துக்குடியில் தி.மு.க. ஆட்சியில் கொண்டு வரப்பட்ட பாதாள சாக்கடை நிறைவேற்றி இருந்தால் மக்கள் பாதிப்புக்கு உள்ளாகி இருக்க மாட்டார்கள் என கனிமொழி எம்பி கூறினார். 

தூத்துக்குடி மாவட்டத்தில் பெய்த பலத்த மழையால் பல்வேறு இடங்களில் மழைநீர் குளம்போல் தேங்கி கிடக்கிறது. வீடுகளையும் மழைநீர் சூழ்ந்து உள்ளது. இதனை அறிந்த தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி நேற்று மதியம் சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடிக்கு வந்தார். அவர் தூத்துக்குடி எழில்நகருக்கு சென்றார். அங்கு தேங்கி இருந்த மழைநீரை அகற்றுவதற்கு உரிய நடவடிக்கை எடுக்க அதிகாரிகளை அறிவுறுத்தினார். தொடர்ந்து அன்னை திரேஸ் காலனிக்கு சென்றார். அங்கு தேங்கி கிடந்த மழைநீரில் நீண்ட தூரம் நடந்து சென்று பார்வையிட்டார். அங்கு இருந்த மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

பின்னர் கனிமொழி எம்.பி. தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகத்துக்கு வந்து மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, ஆணையர் ஜெயசீலன் ஆகியோருடன் ஆலோசனை நடத்தினார். மாவட்டம் முழுவதும் தேங்கி உள்ள மழைநீரை அகற்றுவதற்கு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார். அப்போது, தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் கீதாஜீவன் எம்.எல்.ஏ., பொதுக்குழு உறுப்பினர் ஜெகன் மற்றும் கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர். பின்னர் கனிமொழி எம்.பி செய்தியாளர்களிடம் கூறியதாவது: தூத்துக்குடியில் அதிக அளவில் மழை பெய்து உள்ளது. இதனால் பல இடங்களில் தண்ணீர் வடிவதற்கு வழி இல்லாமல் குடியிருப்பு பகுதிகளுக்குள், வீடுகளுக்குள் புகுந்து உள்ளது. 

அங்கு உள்ள மக்கள் வீடுகளில் இருக்க முடியாத சூழல் உருவாகி உள்ளது. இந்த பிரச்சினைகளை மாவட்ட ஆட்சியரிடம் தெரிவித்து உள்ளோம். அவர் உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்து உள்ளார். மக்கள் வசிக்க முடியாத பகுதிகளில் தற்காலிகமாக தங்கும் வசதி செய்து கொடுப்பதாகவும் கூறி உள்ளார். தி.மு.க. தலைவர் கருணாநிதி ஆட்சியில் கொண்டு வரப்பட்ட பாதாள சாக்கடை திட்டம் இதுவரை நிறைவேற்றப்படாமல் உள்ளது. அதனை நிறைவேற்றி இருந்தாலே மக்கள் இந்த அளவுக்கு பாதிப்புக்கு உள்ளாகி இருக்க மாட்டார்கள். எனவே அரசு இதற்கு பிறகாவது, அந்த திட்டத்தை விரைந்து நிறைவேற்றி தர வேண்டும். 

ஆளும் கட்சியினர் வெள்ளம் பாதிப்பை பார்க்க வரவில்லை என்பது மக்களுக்கு தெரியும். நாங்கள் மக்களை சந்திக்கிறோம். எங்களால் முடிந்த உதவிகளை செய்து வருகிறோம்.உள்ளாட்சி தேர்தல் நடத்தாததே, அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க முடியாத சூழலை உருவாக்கி உள்ளது. அரசு எந்த விதமான மழைநீர் வடிகாலையும் தூர்வாரவில்லை. தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பலமுறை குற்றம் சாட்டியும், இந்த பிரச்சினைகள் தீர்க்கப்படவில்லை. இதற்கு அரசு நியாயமான தீர்வு காணவேண்டும். இல்லையென்றால் ஒரு வருடம் கழித்து வரும் தேர்தலில் மக்கள் அவர்களுக்கு சரியான தீர்ப்பு தருவார்கள் என்றார். 


மக்கள் கருத்து

குமார்Dec 3, 2019 - 10:45:06 AM | Posted IP 108.1*****

கடல் மட்டத்தை விட தூத்துக்குடி தாழ்வான பகுதி...இங்கே பாதாளசாக்கடை திட்டம் முழுமையாக வெற்றியடைவது சந்தேகமே? தங்களது தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து தூத்துக்குடியில் சாலைகளையும், வடிகால்களையும் சீரமைத்து தரவேண்டும் என்பது தூத்துக்குடி மக்களின் எதிர்பார்ப்பு...

இவன்Dec 2, 2019 - 10:53:19 AM | Posted IP 162.1*****

பாதாள சாக்கடை எங்கு தேவையோ அங்கு மட்டும் அமைத்தால் போதும் , திருமண மண்டபம் , ஹோட்டல் , லாட்ஜ்..மட்க்டும் தான் பாதாள சாக்கடை அமைக்கலாம் .... தேவை இல்லாமல் நல்லா இருந்த இடத்தில சாக்கடையாக்குவது மாநகராட்சியின் பணத்துக்காக வேலை, உருப்படியாக செய்வதில்லை ... மழை நீர் சேமிக்க சொன்னா , ஒவ்வொரு தெருவிலும் சாக்கடை சேமிப்பு திட்டம் கொண்டுவருகிறார்கள் சை...

ஒருவன்Dec 2, 2019 - 10:49:11 AM | Posted IP 162.1*****

காசுக்காக பாதாள சாக்கடை எல்லாம் தேவை இல்லை .. அந்த சாக்கடையில் வெளிவரும் தண்ணீர் தான் தெருவெல்லாம் பரவி தொற்றுநோய்ம், டெங்கு, மலேரியா பரவும் அபாயம் உள்ளது , குடிநீரில் கலக்கும் வாய்ப்புஉள்ளது . உங்க வீட்டில மட்டும் போய் அமையுங்க .. எங்க தெருவுல தோண்டி சாக்கடையாகி , ஊரை நாறடித்து , நோய் பரப்பி , நாசமாக நீங்கள் எல்லாம் யாரு ??? உருப்படியாக மழைநீர் சேமிக்கும் திட்டம் அமைக்க தெரியல , சாக்கடையை சேமிக்க தெரியுது ..ஒவ்வொரு தெருவில் கிணறு தோண்டி அமைக்க வேண்டும் , மழைநீர் எல்லாம் அதன் வழியாக சேமிக்க வேண்டும், சேமித்தால்தான் நிலத்தடி நீர் மட்டம் உயரும் வாய்ப்புள்ளது ...வெயில் காலத்தில் குளிக்க தண்ணீருக்காக உங்ககிட்ட நாங்க அலைய வாய்ப்பிருக்காது ..இனி படித்தவர்கள் தான் ஆட்சிக்கு வரணும்

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

சேகர தலைவரை தாக்கிய முன்னாள் ஊழியர் கைது

புதன் 30, செப்டம்பர் 2020 11:02:19 AM (IST)

Sponsored Ads


Anbu Communications

Black Forest CakesThoothukudi Business Directory