» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் வெள்ளநீரால் பிரதான சாலை மூடல் : போலீசார் பாதுகாப்பு

ஞாயிறு 1, டிசம்பர் 2019 7:32:21 PM (IST)போல்டன்புரம் பகுதியில் மழைநீர் சூழ்ந்ததால், திருச்செந்தூர் செல்லும் பிரதான சாலையான அம்பேத்கர் சாலை மூடப்பட்டுள்ளது.

வங்கக்கடலில் உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழகம் முழுக்க தீவிர கனமழை பெய்து வருகிறது. இந்த காற்றழுத்த தாழ்வு நிலை வேகமாக பலம் பெற்று வருகிறது. இதில் தூத்துக்குடியில் நேற்றிரவு முழுவதும் மழை பெய்தது. தூத்துக்குடியில் 163.8 மிமீ மழை பெய்துள்ளதால் தூத்துக்குடி நகரமே மழை வெள்ளத்தில் மிதக்கிறது. போல்டன்புரம் பகுதியில் மழைநீர் சூழ்ந்ததால், திருச்செந்தூர் செல்லும் பிரதான சாலையான அம்பேத்கர் சாலை மூடப்பட்டுள்ளது. போலீசார் தென்பாகம் காவல் நிலையம் அருகே பேரிகார்டுகள் வைத்துள்ளனர். 

மேலும், அந்த வழியாக வாகனங்கள் சென்றால் பாதுகாப்பாக இருக்காது என்பதால் அப்பகுதியில் போலீசார் பாதுகாப்பு பண்யில் ஈடுபட்டு வருகின்றனர். திருச்செந்தூர் செல்லும் வாகன‌ங்கள் சிதம்பரந்கர் வழியாக பிரையண்ட்நகர் 1வது தெரு வழியாக காமராஜர் சாலை சென்று பின்னர் திருச்செந்தூர் சாலை வழியாக செல்கின்றன.  


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

சேகர தலைவரை தாக்கிய முன்னாள் ஊழியர் கைது

புதன் 30, செப்டம்பர் 2020 11:02:19 AM (IST)

Sponsored AdsBlack Forest CakesAnbu Communications
Thoothukudi Business Directory