» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை : மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

ஞாயிறு 1, டிசம்பர் 2019 7:00:43 PM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக பல்வேறு பள்ளி, கல்லூரிகளில் மழைநீர் தேங்கி உள்ளதால் பள்ளி கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை என மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கனமழை காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்தில்பல இடங்களில் தொடர் மழை பெய்து வருகிறது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. வங்கக் கடலில் மன்னார் வளைகுடாவை ஒட்டிய கடலோரப் பகுதியில் குறைந்த காற்றழுத்தம் உருவாகியுள்ளது.

இது வடக்கு மற்றும் வடமேற்கு திசையில் நகரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன் காரணமாக தமிழக கடலோர மாவட்டங்களில் இன்று சில இடங்களில் கனமழை பெய்யும் என்று தெரிவித்தது. இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக பல்வேறு பள்ளி, கல்லூரிகளில்  மழைநீர் தேங்கி உள்ளதாலும்  மேலும் வானிலை ஆய்வு மையம் நாளை கனமழை பெய்யும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளதாலும் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி உத்தரவிட்டுள்ளார்.

கேங்மேன் நேர்முகத் தேர்வு

கோவில்பட்டி இளையரசநேந்தல் ரோட்டில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் நாளையும் நாளை மறுநாள் நடைபெற இருந்த கேங்மேன் நேர்முகத் தேர்வு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்துள்ளதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.


மக்கள் கருத்து

செந்தில்Dec 3, 2019 - 07:21:35 PM | Posted IP 162.1*****

செமெஸ்டர் தேர்வு எழுதாத மாணவர்களுக்கு வ .உ .சிதம்பரம் கல்லூரி நிர்வாகம் தயவு செய்து மாற்று ஏற்பாடு செய்யுங்கள் .

நாகராஜ்Dec 3, 2019 - 12:38:36 PM | Posted IP 162.1*****

மழை காரணமாக கல்லூரிகள் விடுமுறை அறிவிக்கப்பட்டு இருந்தாலும் செமெஸ்டர் தேர்வுகள் நடைபெறும் என வ.உ.சிதம்பரம் கல்லூரி திடீரென அறிவித்து விட்டது . இதனால் பல மாணவர்கள் தேர்வை எழுதமுடிய வில்லை .மாவட்ட ஆட்சியர் அறிவித்தும் கல்லூரி நிர்வாகம் ஏன் செய்தது என்று தெரியவில்லை .தேர்வு எழுதாத மாணவர்களுக்கு நிர்வாகம் மாற்று ஏற்பாடு செய்யுமா ?

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Friends Track CALL TAXI & CAB (P) LTD

Black Forest CakesAnbu CommunicationsThoothukudi Business Directory