» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் பால் பண்ணை அதிபர் படுகொலை : அதிகாலையில் பயங்கரம்!!

வெள்ளி 29, நவம்பர் 2019 10:35:00 AM (IST)

தூத்துக்குடியில் அதிகாலை தூங்கி கொண்டிருந்த பால் பண்ணை அதிபர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி தாளமுத்துநகர் டி.சவேரியார் புரத்தைச் சேர்ந்தவர் காசி மகன் அந்தோணி முத்து என்ற தங்கராஜா (62). இவருக்கு ஜேஜே நகரில் 10 சென்ட் நிலம் உள்ளது. இதில் 5 சென்ட் இடத்தில் மாடுகள் வைத்து பால்பண்ணை வைத்து தொழில் செய்து வருகிறார். மீதமுள்ள 5 சென்ட் நிலத்தை தூத்துக்குடி கிருஷ்ணராஜபுரம் 6வது தெருவைச் சேர்ந்த நடராஜன் (65) என்பவருக்கு விற்பனை செய்துள்ளார். அவர் தற்போது அந்த இடத்தில் வீடு கட்டி வருகிறார். இதில் பொது சுவர் கட்டுவதற்கு அந்தோணிமுத்துவிடம் ரூ.1லட்சம் கேட்டுள்ளார். இதனால் இருவருக்டகும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. 

இது தொடர்பாக தாளமுத்துநகர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. கடந்த 2 நாட்களுக்கு முன்னர் சமாதான பேச்சுவார்த்தை நடந்துள்ளது. அப்போது அந்தோணி முத்து பணம் கொடுக்க முடியாது என்று கூறிவிட்டாராம். இந்நிலையில் இன்று அதிகாலை 3.30 மணியளவில் பால்பண்ணையில் தூங்கிக் கொண்டிருந்த அந்தோணி முத்துவிடம் நடராஜன் தகராறு செய்துள்ளார். மேலும் ஆத்திரத்திரம் அடைந்த அவர் அந்தோணி முத்துவை அரிவாளால் வெட்டியுள்ளார். இதில் தப்பியோடிய அந்தோணி முத்து டி.சவேரியார்புரம் சாலைக்கு ஓடி வந்துள்ளார். அவரை விரட்டி விரட்டி நடராஜன் வெட்டிக் கொலை செய்துள்ளார்.  

இதுகுறித்து தகவல் அறிந்து  தாளமுத்துநகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பொறுப்பு பிரபாவதி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவரது உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் கொலை தொடர்பாக வழக்குப் பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனர். சம்பவ இடத்தை தூத்துக்குடி டிஎஸ்பி பிரகாஷ் பார்வையிட்டார். உயிரிழந்த அந்தோணிமுத்துக்கு தொம்மை நிக்கலோஸ்,விஜயன் என இரு மகன்களும், சரளா என்ற மகளும் உள்ளனர். இந்நிலையில், போலீசாரால் தேடப்பட்டு வந்த நடராஜன் கோவில்பட்டி நீதிமன்றத்தில் சரண் அடைந்தார். அவரை 15 நாட்கள் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இந்த படுகொலை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Black Forest Cakes


Anbu Communications






Thoothukudi Business Directory