» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

கொலை வழக்கில் தாய் - மகனுக்கு இரட்டை ஆயுள் தண்டனை : தூத்துக்குடி நீதிமன்றம் தீர்ப்பு

புதன் 27, நவம்பர் 2019 12:52:32 PM (IST)

கள்ளக்காதல் விவகாரத்தில் தொழிலாளி எரித்துக் கொல்லப்பட்டது தொடர்பாக  தாய் - மகனுக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து தூத்துக்குடி நீதிமன்றம் தீர்ப்பளித்தது. 

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி சுப்பிரமணியபுரம் 6ஆவது தெருவைச் சேர்ந்த சீனியப்பன் மகன் சண்முகம்(50). கூலித் தொழிலாளி. இவரது உறவினர் அதே பகுதியைச் சேர்ந்த மாரியப்பன் மகன் பெயின்டர் முருகேசன் (55). இவருக்கும், சண்முகத்தின் மனைவிக்கும் இடையே தகாத உறவு இருந்து வந்ததாம். இந்நிலையில் சண்முகம், முருகேசனை கடந்த 2016ம் ஆண்டு நவம்பர் மாதம் அரிவாளால் தாக்கினாராம். இதுதொடர்பாக முருகேசன் அளித்த புகாரின்பேரில் சண்முகத்தின் மீது கிழக்கு காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிந்து அவரை கைது செய்தனர். 

இதற்கிடையே, ஜாமீனில் வெளியே வந்த சண்முகம் கடந்த 2017ம் ஆண்டு ஜனவரி மாதம் வீட்டில் தனியாக படுத்திருந்தபோது, எரித்துக் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக கோவில்பட்டி கிழக்கு போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் முருகேசனும்(55), அவரது தாய் செல்வி (63) என்வரும் சேர்ந்து சண்முகத்தை எரித்து கொலை செய்தது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் 2பேரையும் கைது செய்தனர். இவ்வழக்கு விசாரணை தூத்துக்குடி மாவட்ட கூடுதல் நீதிமன்றம் எண் 2ல் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி கெளதமன் குற்றம் சாட்டப்பட்ட செல்வி, மற்றும் அவரது  மகன் முருகேசன் ஆகிய இருவருக்கும் இரட்டை ஆயுள் தண்டனை மற்றும் ரூ.2ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பு கூறினார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

சேகர தலைவரை தாக்கிய முன்னாள் ஊழியர் கைது

புதன் 30, செப்டம்பர் 2020 11:02:19 AM (IST)

Sponsored Ads

Anbu Communications

Black Forest Cakes
Thoothukudi Business Directory